ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும்துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்புஇயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின்பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார்கள்.

வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவுதயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாகபணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்குதலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமேநன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடைவழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள்.

வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு:

மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில்22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர் பரமத்தி சண்முகம், வழக்குரைஞர்குடியரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பரமத்தி சண்முகம் பேசும் போது, இது போன்றஇயக்கங்கள் தான் மக்களுக்கும் நமக்குமான இடைவெளியைக் குறைக்கும் என்றுவாழ்த்திப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர்இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கரூர் மாவட்டத் தலைவர் பாபு(எ)முகம்மது அலி, துணைத் தலைவர் சத்தியசீலன் மற்றும் மோகன் தாஸ், அறிவியல்மன்ற அமைப்பாளர் ஈரோடு சிவக்குமார், செல்வராஜ், சத்தியராஜ், விஜய் ரத்தினம், முத்து,சசிக்குமார், வெங்கட், வல்லரசு ஆகியோர் உள்பட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.

முதல் நாள் மக்கள் சந்திப்பு மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தது. பொதுமக்களுக்கு நமது இயக்கத்தின் கொள்கைகளையும், மக்கள்சந்திப்பு இயக்கத்தை முன்னெடுத்துள்ளதன் நோக்கங் களையும் விளக்கி, தோழர்கள்துண்டறிக்கைகளை வழங்கினர். இயக்க புத்தகங்களும் விற்பனை செய்யப் பட்டன. கரூர்மாவட்டத் தலைவர் தோழர் பாபு வீட்டில் இரவு தோழர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

மே 23, 2014 : காலை 11 மணிக்கு தளிவாசல், சேர்வகாரன்பட்டி, பாலவிடுதி, தரகம்பட்டிஆகிய கிராமங்களில் மக்கள் சந்திப்பு நடந்தது. தோழர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுமக்களைச் சந்தித்து பேசினர். இந்தப் பகுதிகளில் இருந்துதான், கழகத்தின் சார்பில் நடந்தஈரோடு மாநாட்டிற்கு 25 க்கும் மேற்பட்ட புதிய தோழர்கள் வந்திருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தளிவாசல் கிராமத்திலுள்ள இளைஞர்களையும் தோழர்களையும் ஊர்சாவடிக்கு வரவழைத்து, நமது இயக்கம் பற்றியும், சாதி ஒழிப்புக்கு நாம் முன்னெடுத்துள்ளபணிகள் பற்றியும், கடவுள், மூட நம்பிக்கைகள் பற்றியும், ஜாதி மறுப்பு இணையருக்குஏற்படும் இன்னல்களையும், அதற்கென “ஜாதி மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்” என்றதுணை அமைப்பு தொடங்கப்பட் டுள்ளதையும் விளக்கி தோழர்கள் கலந்துரையாடினர்.

இதில் கழகப் பொருளாளர் இரத்தினசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார்,சசிக்குமார், வெங்கட், செல்வராஜ், சத்தியராஜ், விஜி, சத்தியசீலன், பாபு, தோழர் மோகன்தாஸின் மகள் 4 ஆம் வகுப்பு படிக்கும் பவதாரிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.பவதாரிணி பெண்கள் மற்றும் தன் வயதையொத்த சிறுவர் சிறுமிகளிடம் சென்று தந்தைபெரியாரின் கொள்கைகளை விளக்கியது அனைவரையும் கவர்ந்தது. அந்தப் பகுதியில்உள்ள மோகன்தாஸ் உள்ளிட்ட நமது தோழர்களின் செயல்பாடுகள் மேல், அப்பகுதி மக்கள்பெருமதிப்பு வைத்திருப்பதை நம்மால் உணர முடிந்தது.

தரகம்பட்டி பகுதிகளில் உள்ள 4 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை யும், அப்பகுதிஆதிக்க சமுதாயத்திலுள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே வைத்திருப்பதையும்,தங்களுக்கும் சத்துணவு அமைப்பாளர் வாய்ப்பு வேண்டும் என்று கேட்டால், “பறைச்சிகள்சமையல் செய்தால் தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்” என்று ஆதிக்கவாதிகள்ஆணவத்துடன் கூறுவதையும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் வேதனையுடன்தெரிவித்தனர். மக்கள் சந்திப்பில் அப்பகுதி தோழர்கள் டேவிட், அன்பு, வினோத் ஆகியோர்ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மே 24, 2014 : காலை 11 மணி முதல் கரூரில் உள்ள பாரதியார் தெரு, வெங்கமேடு ஆகியபகுதிகளில் மக்கள் சந்திப்பு நடந்தது. பாரதியார் தெருவிலுள்ள தமிழ் உணர்வாளர்சாமியப்பன் நமது பணிகளைப் பாராட்டி நன்கொடை வழங்கினார்.

மாலையில் வெங்கமேடுபகுதியில் உள்ள ஒரு குடிசைப்பகுதிக்கு நமது தோழர்கள் சென்றபோது அங்கிருந்தபெரும்பாலான இளைஞர்கள் மது அருந்திவிட்டு (அன்று சனிக்கிழமை) நிலைதடுமாறிநடந்து கொண்டிருந்ததைக் கண்டு, வேதனையுடன் குடிபோதைக்கு எதிரான பிரச்சாரத்தைநமது தோழர்கள் செய்தனர். அங்கிருந்த பெண்கள் குடிபழக்கத்தால் நிலவும் அவலங்களைவேதனையுடன் தெரிவித்தனர்.

மே 25, 2014 : காலை 11 மணி முதல் கோவக்குளம், ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகியபகுதிகளில் மக்கள் சந்திப்பு கரூர் மாவட்டச் செயலாளர் காமராஜ், மற்றும் முத்து ஆகியோர்முன்னிலையில் நடந்தது.நமது தோழர்களை அப்பகுதி ஊஞஆ பொறுப்பாளர் நாகராஜ்வரவேற்று தேநீர் வழங்கி உபசரித்தார். ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் வேலு, மக்கள் சந்திப்பில் உற்சாகத்துடன் நம்முடன் களமிறங்கி மக்கள்சந்திப்பில் ஈடுபட்டார்.

மதிய உணவுக்குப் பின் லாலாபேட்டை பகுதியில் மக்கள் சந்திப்புநடந்தது. அப்பகுதி ம.தி.மு.க நகரச் செயலாளர் சோமு இரவு வரை நம்முடன் கலந்துகொண்டார். லாலாப்பேட்டை பகுதிவாழ் தமிழறிஞர் “பூந்தமிழ் புகழேந்தி” நமது பணியைப்பாராட்டி “அருந்தமிழ் அருளாளர்” என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.

மாலை 5 மணிக்கு கொம்பாடிப்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நடந்தது. அப்பகுதி தேநீர்க்கடைகளில் இருந்த இரட்டைக் குவளை முறை நமது தோழர்களில் கடுமையான எதிர்ப்பால்ஒழிக்கப்பட்டது என்பதும், அதை யொட்டி, கழகத் தலைவர் கொளத்தூர் மணிமுன்னிலையில் அப்பகுதியில் இயக்கக் கிளை தொடங்கப்பட்டு, கொடியேற்றப்பட்டு, ரஞ்சித்உள்ளிட்ட தோழர்கள் நமது இயக்கத்தில் செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மே 26, 2014 : இயக்க ஆதரவாளர் குளித்தலை முருகேசனுக்குச் சொந்தமான கட்டிடத்தில்தங்கி இருந்த தோழர்களுக்கு, நமது இயக்க ஆதரவாளர் பெட்டவாய்த்தலை இராமசாமி-லட்சுமி ஆகியோர் காலை உணவு வழங்கினர். பெட்டவாய்த்தலை மருதூர் கிராமத்தில்மக்கள் சந்திப்பு நடந்தது. அடுத்து ராஜேந்திரம் என்ற கிராமத்தில் நடந்த சந்திப்பின் போது,அப்பகுதியில் உள்ள 80 வயதான விசாலாட்சி என்ற மூதாட்டி, தான் பெரியாருடன்பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

குளித்தலை பகுதியில் நடந்த சந்திப்பின் போது, ம.தி.மு க வைச் சார்ந்த குளித்தலைநகராட்சி துணைத்தலைவர் பல்லவி ராஜா வரவேற்று தேநீர் வழங்கி உபசரித்தார்.தி.மு.க.வைச் சார்ந்த மருதூர் பேரூராட்சித் தலைவர் சம்பத் மதிய உணவு வழங்கினார்.உணவுக்குபின் குளித்தலை ஆற்றங்கரை யோரம் தோழர்கள் ஓய்வு எடுத்தனர்.

மாலை நடந்த சந்திப்பின் போது, நம்மைத் தேடி வந்த மரகதம் என்ற பெண்மணி, தான் ஒருஆயுர்வேத மருத்துவர் என்றும், அப்பகுதியில் இருந்த இராமநாதன் என்ற பெரியார்தொண்டரின் மகள் என்றும், “எனது தந்தை போன்றவர்கள் விட்டுச் சென்ற பெரியாரின்பணிகளை இளைஞர்களாகிய நீங்கள் முன்னெடுத்து செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைஅளிக்கிறது.

உங்களது பணி தொடர வேண்டும் “ என்று பெருமிதம் பொங்கக் கூறி,நன்கொடை வழங்கி, இது போன்றதொரு மக்கள் சந்திப்பை நீங்கள் மீண்டும்குளித்தலையில் நடத்தினால் நீங்கள் கட்டாயம் எங்கள் வீட்டில் இருந்துதான் அந்தச்சந்திப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று உரிமையுடன் கூறி, தனது முகவரியைத் தோழர்களிடம் அளித்தார்.

நம்மை சந்தித்த அப்பகுதி ஆசிரியர் மணிகண்டன் தான் இயக்கத்தில்இணைந்து செயல்பட விரும்புவதாகக் கூறினார். குளித்தலையில் ஆடிட்டராகப் பணிபுரியும்பகுத்தறிவுவாதியான அறிவுக்கண்ணன் என்ற தோழர், தன்னுடைய வீட்டு நிகழ்வுகளைஎவ்வித சடங்குகளும் இல்லாமல், செய்வதைக் கூறி, நமது மக்கள் சந்திப்பு பணிகளைப்பாராட்டி நன்கொடை வழங்கினார். கரூர் மாவட்டத் தலைவர் பாபு, மற்றும் துணைத்தலைவர் சத்தியசீலன் ஆகியோர் 4 நாட்களும் நம்முடனிருந்து பணிகள் சிறப்புறஉறுதுணையாக இருந்தனர்.

மே 27, 2014: காலை 10 மணிக்கு முக்கொம்பு, ஜீயர்புரம் போன்ற பகுதி களில் மக்கள் சந்திப்புநடந்தது. ஜீயர்புரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்ற நமது தோழர்கள்அங்கிருந்தவர் களிடம் துண்டறிக்கைகளை வழங்கினர். சட்டப்படி இது தவறு என்றுமிதப்புடன் கூறிய வருவாய் ஆய்வாளரிடம், “அரசு அலுவலகங்களில் கடவுள் மதம் சம்பந்தமான படங்களோ, குறியீடுகளோ இருக்கக் கூடாது என்று கூடத் தான் சட்டம் சொல் கிறது,அரசாணைகளும் உள்ளன, எங்களது இந்தச் சந்திப்பை சட்டப்படி தவறு என்று கூறும் நீங்கள்,கடவுள் படம் தொடர்பான அரசாணையை ஏன் கடைப்பிடிக்கவில்லை? சட்டத்தை ஏன் மீறுகிறீர்கள்?

ஏன் இவ்வளவு பெரிய கடவுளர் படங்களை வைத்துள்ளீர்கள்? இது போன்றபடங்களை வைத்தால், அரசு அலுவலகங்கள் அனைவருக்கும் பொது வானது என்ற எண்ணத்தில் இங்கு வரும் மாற்று மதத்தினரையும், எங்களைப் போன்ற கடவுள் நம்பிக்கையற்றநாத்திகர்களையும் அது புண்படுத்து வதாகாதா? என்று சராமரி கேள்வி களை நமது தோழர்செல்வராஜ் எழுப்பவும், வருவாய் ஆய்வாளர் வாயடைத்து நின்றார்.

மதியம் தோழர்கள்திருச்சி மனோகரன் மேலாளராகப் பணி புரியும் ஷகீலா தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். மாலை திருச்சி நகரில் மக்கள் சந்திப்பு நடந்தது. சமயபுரம் கோவிலில்யானைகளை வைத்துள்ள நமது ஆதர வாளர் சுகுமார், நமது மக்கள் சந்திப்பு முயற்சியைவாழ்த்தி, ரூ 2,000/- மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கிஉற்சாகப்படுத் தினார். தோழர்கள் இரவு இருங்களூர் காந்தி நகரில் உள்ள “ஆதிவாசிக்கூட்டமைப்பு கட்டிடத்தில்” கரூர் தோழர் மோகன் தாஸ் அவர்களின் உதவியால் தங்கவைக்கப்பட் டனர்.

மே 28, 2014: காலை உணவைத் தயாரித்து, மதியத்திற்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்ட தோழர்கள் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர். மகிழம்பாடிஅருகிலுள்ள புறத்தாக்குடி கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போது, நம்மைச் சந்தித்தசவரி ஆனந்தன் என்ற 75 வயது பெரியார் தொண்டர், கிறிஸ்தவ மதத்தைப் பெரும்பாலும்தழுவிய இந்த ஊரில், தான் மட்டும் கருப்பு சட்டை அணிந்து, பெரியார் தொண்டனாகஇருப்பதைக் கூறி, தனது மகன் டாக்டர்.

வீரமணி திருச்சி ஜோசப் கல்லூரியில்விரிவுரையாளராக இருப்பதைக் கூறி பெருமைப்பட்டார். புறத்தாக்குடி கிராமத்தில் நமதுபிரச் சாரத்திற்கு பெரும் ஆதரவு இருந்தது. நமது பணியைப் பாராட்டிய அன்னை அக்ரோநிறுவனம் உரிமை யாளர் நன்கொடை வழங் கினார். சைக்கிள் கடை வைத்திருக்கும் தனிசிலாஸ் என்ற கிறிஸ்தவர், பெரியார் கொள்கைகள் என்றென் றும் மக்களுக்குத் தேவைஎன்று கூறி, நன்கொடை வழங்கி நம்மை உற்சாகப் படுத்தினார். பிறகு நெற் குப்பை என்றகிராமத்தில் பிரச்சாரம் நடந்தது. லால்குடிக்குச் செல்லும் வழியில் மரத்தடி நிழலில் மதியஉணவு அருந்திய தோழர்கள் சற்று நேரம் ஓய்வு எடுத்தனர்.

லால்குடி நகரத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது, அப்துல்லா என்ற முஸ்லிம் பெரியவர், தான்பெரியாரையும் மணி யம்மையாரையும் சந்தித் துள்ளதைக் கூறி, பெரி யாரும் பெரியார்இயக்கங் களும் இல்லையேல், தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் பெரிதும்ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறினார்.

அடுத்து பூவாளூர் கிராமத்தில் நடந்த பிரச் சாரத்தின் போது, த.பெ.தி.க.வைச் சார்ந்தஜெகந்நாதன் என்ற பெரியார் தொண்டர் நம்மை உற்சாகப்படுத்தி ரூ.500/- நன்கொடைவழங்கினார். அவ்வூரில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரும், வழக் கறிஞர் அமிர்தநேசன்என்பவரது தந்தையுமாகிய மூத்த பெரியார் தொண்டர், பெரியார் கொள்கைகளைஎங்களுக்குப் பின், இளைய தலைமுறை இளைஞர் களாகிய நீங்கள் இவ்வாறு ஊர்தோறும்பிரச்சாரம் செய்வது, எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று நம்மைப்பாராட்டி, ரூ.1000/- நன்கொடை அளித்து உற்சாகப்படுத்தினார். இந்தப் பிரச்சாரத்தில் திருச்சிஇரயில்வே துறையில் பணி புரியும், விருதுநகரைச் சார்ந்த கணேசமூர்த்தி நம் முடன் மக்கள்சந்திப்பில் உற்சாகமுடன் ஈடுபட்டார்.

மே 29, 2014 : காலை 11 மணிக்கு பாடாலூரில் மக்கள் சந்திப்பு நடந்தது. பிறகு பெருவளப்பூர்என்ற கிராமத்தில் மக்கள் சந்திப்பு நடந்தது. அங்கு சிதம்பரம் என்ற மூத்த பெரியார்தொண்டர், 1957 ல் 4000 பேர் கைதான சட்ட எரிப்புப் போரில் தானும் கலந்து கொண்டு 1ஙூஆண்டுகள் சிறைதண்டனை பெற்றதையும், தங்கள் ஊரில் 5 பேர் சிறை தண்டனைபெற்றதையும் கூறி, தான் அக்காலத்திலேயே சாதி மற்றும் மத மறுப்புத் திருமணம்செய்துள்ளதையும், தன் மகனுக்கு விதவைத் திருமணம் செய்து வைத்துள்ளதையும்கூறினார்.

அக்காலத்தில் பெருவளப்பூர் கிராமம் பெரியாரின் கோட்டையாகத் திகழ்ந்ததையும், நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அவ்வூரில் இருந்ததையும் பெருமையுடன்நினைவுகூர்ந்தார்.

அடுத்து நமது பிரச்சாரம் விடுதலைபுரம் என்ற கிராமத்திற்குச் சென்றது. அவ்வூரில் இருந்ததங்கவேல் என்ற பெரியார் தொண்டர், தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை மக்களுக்கு எழுதிவைத்து, அதில் அனைத்து சாதி, மத மக்களுக்கும் இடம்கொடுத்து, அன்றே ஒரு “சமத்துவபுரத்தை” உருவாக்கி, 10.6.64 ல் பெரியார் பெருவளப்பூர் கிராமத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்புஊர்வலத்திற்குச் சென்றபோது, தங்களது ஊரின் விடுதலைபுரம் என்ற பெயர்ப் பலகையைதிறந்து வைத்ததை அவரது மகன் வீரசேனன் கூறினார்.

தனது தந்தை தங்கவேலனாரும்,தாயார் மங்கையற்கரசியும் பெருவளப்பூர் கிராமத்தில் நடந்த மூடநம்பிக்கை ஊர்வலத்தில்கலந்து கொண்டு அலகு குத்திக் கொண்டு சென்றதையும், மாலை நடந்த பொதுக்கூட்டத்தில்பெருவளப்பூர் கிராம மக்கள் சார்பாக பெரியாரின் எடைக்கு எடை மிளகாய் மூட்டைவழங்கப்பட்ட போது மேடையில் தன் சார்பாக “ஊர் பேர் திறந்தவருக்கு, ஒப்பில்லாஅய்யாவுக்கு உப்பு மூட்டை வழங்குகிறேன்” என்று கூறி, தந்தை பெரியாரின் எடைக்கு எடைஉப்பு மூட்டை வழங்கியதைக் கூறினார்.

அடுத்து நமது மக்கள் சந்திப்பு புள்ளம்பாடி கிராமத்தில் நடந்தது. இளைஞர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் நமது கருத்துக்களைக் கேட்டனர். நம்மை வழி மறித்த ஆர்.எஸ்.எஸ்உறுப்பினரான இளைஞர் ஒருவர், நாங்கள் எங்கள் இயக்கத்தில் ஜாதி பார்ப்ப தில்லைஎன்றார். அவரிடம் நமது தோழர்கள் அப்படியே அவர்களது குடும்பங்களில் திருமண உறவுவைத்துக் கொள்வீர்களா? சமமாக நடத்துவீர்களா?

கோவிலில் நுழைய தாழ்த்தப்பட்டமக்களுக்கும் அனுமதி கொடுப்பீர்களா? பார்ப்பனர் மட்டுமே பூஜை செய்யும் கருவறையில்நுழைந்து சூத்திர மக்களும் பூஜை செய்ய, பூஜிக்க பாடுபடுவீர்களா? வெறுமனே இந்துக்களேஒன்றுபடுங்கள் என்று கூவுவதில் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினர்.

மே 30, 2014 : காலை 11 மணிக்கு சமயபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போது, செல்பேசிகடை வைத்திருக்கும் பாண்டி என்ற இளைஞர், தான் பெரியார் கொள்கைகள் மீது பற்றோடுஇருப்பதாகவும், தனக்கு மேலும் அதிக தகவல்கள் தேவை என்றும் கூறி, தனது தொடர்புஎண்ணைக் கொடுத்து நமது எண்னையும் வாங்கிக் கொண்டார்..

சமயபுரத்திற்கு வேறுவேலையாக வந்திருந்த குளித்தலை ஆர்ச்சான்பட்டியைச் சார்ந்த வெங்கடாச்சலம் என்பவர்,கடையில் தேநீர் அருந்திய நமது தோழர்களுக்கான கட்டணத்தை நான்தான் தருவேன் என்றுகட்டாயப்படுத்தி கொடுத்ததோடு, தான் இயக்கத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாகக்கூறி, தனது முகவரியைக் கொடுத்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் நமது தோழர்மனோகரன் அவர்களைச் சந்தித்த பின், ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த மூத்த பெரியார் தொண்டர் 83வயதான, பல் மருத்துவர் எஸ்.எஸ் முத்து நமது தோழர்களைச் சந்தித்தார். நம்மைஉற்சாகப்படுத்திய அவர் பெரியாருடனான தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

பெரியார் கொள்கையில் வளர்ந்த தனது மகள், தற்போது மகப்பேறுமருத்துவராக உள்ளதாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இடமிருந்து 6தங்கப் பதக்கங்கள் பெற்றதையும், இது குறித்த செய்தி “புரட்சிப் பெரியார் முழக்கத்தில்”வந்துள்ளதையும் காட்டிய அவர், மற்றொரு மகள் நீதிபதியாக உள்ளதையும், மகன் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராக உள்ளதையும் கூறி, தான் இப்போது கூட பல்மருத்துவம் பார்த்து வருவதைக் குறிப்பிட்டார். நம் தோழர்கள் அவரிடருந்து விடைபெற்று, 9நாள் மக்கள் சந்திப்பை முடித்துக் கொண்டனர்.

22.5.14 முதல் 30.5.14 முடிய, 9 நாட்களும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தோழர்கள் :

ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர்; ப. சிவக்குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர்;செல்வராசு, சென்னிமலை ஒன்றியத்தலைவர்; சத்தியராசு, கொங்கம்பாளையம் கிளைத்தலைவர்; விஜய் ரத்தினம், ரங்கம்பாளையம் பகுதி.

இடையிடையே கலந்து கொண்ட தோழர்கள் - ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றியச் செயலாளர்;சித்துசாமி, காவலாண்டியூர்; பழனிச்சாமி, காவலாண்டியூர்; சித்தன், காவலாண்டியூர்;ராஜேந்திரன், காவலாண்டியூர் கிளைத் தலைவர்; மாரியப்பன், காவலாண்டியூர் கிளைச்செயலாளர்; பாண்டியன், கொடுமுடி வெங்கட்; தமிழ்நாடு மாணவர் கழக ஈரோடு மண்டலச்செயலாளர்; சசிக்குமார், சென்னிமலை; வல்லரசு, உப்பிலிபாளையம்; காமராஜ், கரூர்மாவட்டச்செயலாளர்; பாபு (எ) முகம்மது அலி, கரூர் மாவட்டத் தலைவர்; சத்தியசீலன், கரூர்மாவட்டதுணைத் தலைவர்; மோகன் தாஸ், கரூர் மாவட்ட துணைச் செயலாளர்; பவதாரிணி,நான்காம் வகுப்பு; முத்து, கோவக்குளம்; தமிழ்முத்து, திருச்சி; கணேசமூர்த்தி, விருதுநகர்;அவிநாசி, காவலாண்டியூர்; வடிவேல் (நடத்துனர்) பரமத்தி; வாகன ஓட்டுநர்கள் - வல்லரசு,சிவக்குமார், அவிநாசி.

89 வயது பெரியார் தொண்டரின் நெகிழ்வலைகள் மே 29 ஆம் தேதி பெருவளப்பூரில் நாம் சந்தித்த 89 வயது சாமிநாதன் என்ற மூத்த பெரியார் தொண்டர் சற்றும் உற்சாகம் குறையாமல் ஒரு இளைஞன் போல் நம்முடன் உரையாடினார்.

1948 ல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில், அண்ணாவை வாகனத்தில் அமர்த்தி, பெரியார் நடந்துவந்ததையும், தானும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.

1944 ல்சேலத்தில் நடந்த மாநாட்டிற்கு தான் செல்லும் போது, சாமிக்கென தன் தாயார் சேர்த்து வைத்திருந்த 19 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு 18 மைல் நடந்து மெயின் ரோட்டுக்குவந்ததையும், ஒரு குச்சியில் கருப்புக் கொடியைக் கட்டி, சாலையில் போகும் வாகனங்களை நிறுத்தி, அதில் ஏறி சேலம் செல்ல முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக பெரியார் வந்த வண்டியையே வழிமறித்ததையும், தான் 18 மைல் நடந்தே வந்ததைக் கேட்ட பெரியார் தன்வாகனத்திலேயே ஏற்றி, மாநாட்டிற்கு கூட்டிச் சென்றதையும், 2 நாள் மாநாடு முடிந்து, பெரியார் கிளம்பும் போது தான் மீண்டும் பெரியாரிடம் வந்து நின்றதையும், பெரியார்தன்னை மீண்டும் வண்டியில் ஏற்றி, சொந்த ஊருக்குச் செல்ல உதவியதையும் நினைவுகூர்ந்தார்.

வாகனத்தில் வரும் போது, தான் கொண்டு வந்த பெரிய மூட்டையைப் பார்த்த பெரியார், அது என்ன என்று விசாரித்ததையும், மாநாட்டிற்கு கொண்டு சென்ற 19 ரூபாய்க்கும்(அக்காலத்தில் அது பெரிய தொகை) புத்தகங்கள் வாங்கி, வீட்டிற்கு கொண்டு செல்வதைக்கேட்ட பெரியார், தன்னைப் பெரிதும் பாராட்டினார் என்று பெருமிதம் அடைந்தார். மீண்டும்உனது ஊருக்குச் செல்வதற்கு பணம் உள்ளதா? எவ்வளவு செலவாகும்? என்று பெரியார்கேட்ட போது, 6 அணா தேவைப்படும் என்று தான் கூறவே, பெரியார் தனக்கு 12 அணாகொடுத்து வழியனுப்பி வைத்தார் என்று பெரியாருடனான தனது அனுபவங்களைபெருமகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.

நாம் கிளம்பும் போது, அவரது மகன் நம்மிடம், தன் தந்தை இவ்வூரில் 3 முறை ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தபோது, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதையும், கிராமத்தில் பள்ளி, மற்றும் மருத்துவமனைகொண்டு வந்ததையும் கூறி, எல்லாக் கிராமங்களிலும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள்பெரும்பாலும் ஊருக்கு மேற்கே தான் இருக்கும், (நமது நிலத்தின் அமைப்பு மேற்கு நோக்கி சரிந்துள்ளதால், ஆறு, வாய்க்கால் போன்றநீர்நிலைகளை தாங்கள் பயன்படுத்திய பின்னரே, தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தவேண்டும் என்று ஆதிக்க சமூகத்தினர் நினைத்ததுகூட காரணமாக இருக்கலாம்).

ஆனால்,அதை தன் தந்தை மாற்றி தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளை ஊருக்கு மத்தியில், கிழக்கில்கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கொண்டு வந்ததைச் சுட்டிக் காட்டினார். அதன் காரணமாகஅந்தப் பகுதி சாமிநாதபுரம் என்று தன் தந்தை பெயரால் அழைக்கப்படுவதைக் கூறினார்.நாமும் பெரியார் பெருந்தொண்டர்களைப் பார்த்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டமனநெகிழ்ச்சியுடன் விடைபெற்றோம்.

அதே ஊரில் மாணிக்கம் என்ற பெரியார் தொண்டர், 40 ஆண்டுகளுக்கு முன்பு,பெருவளப்பூரில் உணவு விடுதி நடத்தி, அனைத்து சமூகத்தினரும் அங்கு சமமாக அமர்ந்துஉணவு அருந்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததை அவரது மகன் நினைவு கூர்ந்தார்.

தொகுப்பு : ஈரோடு சிவகுமார்

Pin It