ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் முஸ்லிம் பெண்கள் நிகாப் எனும் முகத்திரையை அணியக் கூடாது என்று புதிய சட்டம் இயற்ற முடிவு செய்திருக்கிறது அந்நாட்டு அரசு.

அடுத்த மாதம் பாராளுமன் றத்தில் இச்சட்டம் வாக்கெடுப் பிற்கு விடப்பட உள்ளது. இச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்று மனித உரிமை அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இச்சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் முகத்திரை அணிந்து வரும் பெண்ணிடம், முகத்திரையை அகற்றுமாறு போலீஸôர் கோருவார்கள். அப்போது முகத்திரையை அகற்ற வேண்டி வரும். மறுத் தால் ஒரு வருட சிறைத் தண் டனை அல்லது 5500 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்கிறது இச்சட்டம்.

முகத்தை மூடி வாகனங் களை ஓட்ட அனுமதிக்க இய லாது. இது அடையாளங்காண தடையாக உள்ளது என்று முகத்திரைக்கு காரணம் கூறுகி றது அரசு. ஆனால் முஸ்லிம் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று எதிர்ப்பு காட்டி வருகின்றன.

உண்மையில் முகத்திரையை போட்டு முகத்தை மூட வேண் டும் என்று இஸ்லாம் கட்டளை யிடுகிறதா என்றால் இல்லை. முகத்தை மறைக்கச் சொல்ல வில்லை இஸ்லாம். உலகில் இயங்குவதற்கும், அடையாளப்ப டுத்திக் கொள்வதற்கும் முகம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பேணுதல் என்கிற அடிப்படையில் முஸ்லிம் பெண் கள் முகத்திரையை அணிகிறார் கள். இது தீமைகளுக்குத்தான் வழிவகுப்பதாக அமைந்துள்ளது. தவறு செய்பவர்களுக்கு முகத் திரை பாதுகாப்பு கவசமாக உள் ளது.

தவறு செய்யும் இயல்போடு தான் மனித இனம் படைக்கப்பட் டிருக்கிறது. தம்மை யாரும் அடையாளங்காண மாட்டார் கள் என்று முடிவு செய்து தவ றைச் செய்ய எண்ணுகிற ஒரு பெண்ணுக்கு முகத்திரை ஊக்கத் தைத் தருகிறது.

போலீஸாரிடம் பிடிபடும் விபச்சாரப் பெண்கள் கோர்ட் டுக்கு அழைத்து வரப்படும் போது முகத்தை மூடிய நிலை யில் வருவதை செய்திகள் வாயி லாகப் பார்க்க முடிகிறது.

இந்தத் தவறில் ஈடுபட்டது தான்தான் என்று உலகத்திற்கு தெரிந்து விடக் கூடாது என்ப தால்தான் அவர்கள் முகத்தை மறைக்க முன் வருகிறார்கள். ஆக, தவறு செய்ய மனம் தூண்டுகிற போது வெளியுலகத்திலிருந்து அதை மறைக்க முகமூடி தேவைப் படுகிறது. இதுபோன்ற தவறுக ளுக்கு வாய்ப்பளிப்பதாக இருப்ப தால்தான் இஸ்லாம் முகத்தை வெளிப்படுத்தி தன்னை உலகத் திற்கு அடையாளங்காட்டச் சொல்கிறது.

சில வருடங்களுக்கு முன் சென்னையில் முகத்திரையோடு கூடிய புர்கா அணிந்த ஆண் ஒருவன் பெண்கள் விடுதியில் இரண்டு நாட்கள் வரை பெண்க ளோடு பெண்களாக தங்கியிருந் ததை ஏடுகள் செய்திகளாக வெளியிட்டன என்பதை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்த மாக இருக்கும்.

இது தவிர நிர்வாக ரீதியாக அரசாங்கங்களுக்கும் இது சங்க டத்தைத்தான் ஏற்படுத்துகின் றன. விமான நிலையங்களில் ஆள் மாறாட்டம் செய்து பய ணம் மேற்கொள்ளவும் முகத் திரை பயன்படுகின்றது.

குவைத் உள்ளிட்ட சில வளைகுடா நாடுகளில் பல்கலைக் கழக தேர்வு எழுதும் போதும், வாகனம் ஓட்டும்போதும் பெண்கள் முகத்திரையை அணியக் கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டுதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற சட்டங்களை அரசு இயற்றும்போது அதி லுள்ள நியாயத்தின் அடிப்படை யில்தான் ஆதரவும், எதிர்ப்பும் அமைய வேண்டும்.

அதை விடுத்து தீமைக்கு துணைபோகும் விஷயங்களில் தனி மனித சுதந்திரம் பறிபோன தாக விமர்சிப்பதில் அர்த்த மில்லை. இது இஸ்லாமிய சட் டங்களுக்கு எதிரானதுமில்லை. முஸ்லிம் பெண்கள் புர்கா அணியக் கூடாது என்று சட்டம் வருமேயானால்... அதை சர்வதேச முஸ்லிம் சமூகம் முழு பலம் கொண்டு எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

- ஃபைஸல்

Pin It