பாரதிய சிக்ஷா மண்டல் எனும் வலதுசாரி இந்து அமைப்பு கல்லூரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. 1969இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் உள்ளது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் கிளைகளை தொடங்கி இருக்கிறார்கள். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விஜயபாரதம் இதழின் சந்தாதாரர் ஆக்கப்பட்டு மாதந்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படுகிறது.

பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று இந்த உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசு நம்மிடையே உள்ளது கவர்னர் அலுவலகம் நமது கையில் உள்ளது ஆகவே உயர்கல்வித் துறையில் உயர் பதவிகளை நம்மால் மட்டுமே அடைய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. இதில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானவர்கள் சங்க அனுபவம் கொண்டவர்களோ சமூக நீதிக்காக பாடுபடுபவர்களோ கிடையாது அவர்கள் தங்களுக்கு பதவி வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இவர்கள் ஆர்எஸ்எஸ்சின் கிளைகளான விஎச்பி, ஏபிவிபி போன்ற அமைப்புகளின் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிஎஸ்எம் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரி யர்கள் தங்களது துறைகளில் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களை சேர்த்து அவர்கள் மூலமாக ஏபிவிபி எனும் இந்து மாணவர் அமைப்பை வளர்க்கின்றனர்.  

இது உண்மையா?

நேற்று பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர், தமிழ்த்துறைப் பேராசிரியர் பெரியசாமி, சிண்டிகேட் உறுப்பினர் குமாரசாமி (ஆர்.எஸ்.எஸ். நபர்) ஆகியோர் இரகசியமாக கலந்துரையாடி, இந்த ஆண்டு இறுதிக்குள் உறுப்புக் கல்லூரிகளில், 111 பாரதீய சிக்ஷா மண்டல் கிளைகளை நிறுவ வேண்டுமென இலக்கு நிர்ணயித்து உள்ளார்களாமே!

- விடுதலை இராசேந்திரன்

Pin It