“இந்திரா காந்தி. ராஜீவ்காந்தி போல நானும் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்பட வில்லை என்று ராகுல் காந்தி ராசஸ்தானில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

பா.ச.க.வில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின் அவருக்குப் போட்டியாக ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் தொழில் முறை நடிகர்களையெல்லாம் விஞ்சக் கூடிய அளவுக்கு இருக்கின்றன. ”போங்க ஏட்டய்யா. உங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் போலத்தான் இருக்கு’’ என்ற பாணியில் தான் ராகுலின் நடவடிக்கைகளும் உள்ளன.

டிசம்பர் 27 அன்று தில்லியில் இந்தியப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் திடீரென புகுந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் முட்டாள் தனமானது, அவசர சட்டத்தை கிழித்தெறிய வேண்டுமென்றார்.

இரண்டாவது அலைக்கற்றை ஊழல். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல். நிலக்கரி பேர ஊழல் மட்டுமல்ல, தன்னுடைய தங்கை பிரியங்கா கணவர் ராபர்ட் வதோரா நிலப்பேர ஊழல் குறித்து வாய் திறக்காத உத்தமர் இன்று ஊழலுக்கு எதிரானவர் போல பேசுவது பெரிய எவ்வளவு பெரிய கேலிக் கூத்து!

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்ற வகையில் ஆவேசக் காட்சியை அடுத்து கண்ணீர்க் காட்சியினை அரங்கேற்றினார்.

மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பொதுக் கூட்டம் அக்டோபர் 17 அன்று ஹதொல் என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் பேசினார்.

உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி வாக்களிப்புக்கு விடப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்படிருந்ததால் வாக்களிப்பில் சோனியா கலந்துக் கொள்ளவில்லை.

ஏழை எளிய மக்களுக்கெல்லாம் உணவளிக்கக் கூடிய உன்னதமான திட்டம். தன் வாழ்வின் கனவுத் திட்டம். இத்திட்டம் நிறைவேற தான் வாக்களிக்க இயலவில்லையே என்று ராகுலிடம் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறி பொதுக்கூட்டத்தில் ராகுல் கண்ணீர் விட்டார்.

அடுத்து அக்டோபர் 22ல் ராகுல் தான் மாநிலம் கரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தன் உயிருக்கு ஆபத்து என்று பீதியூட்டுகிறார்.

இந்திரா காந்தி. ராஜீவ் காந்தி போல தானும் கொல்லப்படலாம் என்று சொல்கிறார். சீக்கியர்கள் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை. பஞ்சாப் மக்களுக்கும் என் மீது கோபம் இல்லை என்று அறிவிக்கிறார்.

இந்திராகாந்தி கொலையில் தொடர்புள்ள பியாந்த் சிங். சத்வந்த் சிங் மீது கோபம் குறைய 15 ஆண்டுகளானது என்றும் ராகுல் கூறியுள்ளார்.

இந்திரா காந்தி ஆட்சியில் சீக்கியர்களின் புனித்தலமான பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பி பலர் படுகொலை செய்யப்பட்டனர். நீல நட்சத்திர நடிவடிக்கை என்ற பெயரில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகத்தான் இந்திரா படு கொலை செய்யப்பட்டார்.

இந்திரா கொலையில் சோனியா. தவான் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு உண்டு என்று சொல்லப் பட்டது.

இந்திரா இறந்த பிறகு ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். 2000க் கும் மேற்பட்ட சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டனர்.

பெரிய ஆலமரம் விழுந்தால் சிறு அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று ராஜீவ்காந்தி இப் படு கொலைகளை நியாயப்படுத்தினார்.

சீக்கியர் படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட நானாவதி ஆணையம் காங்கிரசை கடுமையாக குற்றம் சாட்டியது.

மன்மோகன்சிங்கும். சோனியாவும் சீக்கிய மக்களிடம் மன்னிப்புக் கோரினர்.

இந்திராவின் தவறுகளை, ராஜீவ் காந்தியின் தவறுகளையெல்லாம் மறைத்து விட்டு சீக்கிய மக்களிடம் ராகுல் பசப்புகிறார்.

ஈழத்தில் ராஜீவ்காந்தியின் இந்திய ராணுவம் சிங்களவர்களுடன் சேர்ந்துக் கொண்டு தமிழ் மக்களை நர வேட்டையாடியது.

1987 அக்டோபர் 10 இல் ஆபரே சன் பவான்; என்ற இராணுவ நட வடிக்கை மூலம் ஈழ தமிழ் மக்கள் மீது கடுமையான போரைக் கட்ட விழ்த்து விடப்பட்டது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கொல்லவும் திட்ட மிட்டார்கள். ஈழத்தமிழர் மீது இந்திய ராணுவம் நடத்திய பாலியல் குற்றங்கள் மற்றும் கொடுமைகள் குருதி தோய்ந்த இனக்கொலைக் குற்றங்க ளாகும்.

இந்திரா. ராஜீவ்காந்தி இவர்களின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராககிடைத்த தண்டனைதான் இவர்களுடைய மரணம். இப்படிப்பட்ட மர ணத்தை நாமும் ஆதரிக்கவில்லை. ஆனால் அரச பயங்கரவாதம் தொடர்ந்து ராணுவம் மற்றும் காவல்துறை மூலம் அப்பாவி மக்கள் மீதும் போராளிகள் மீதும் ஏவப்படுகிறது. பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களுக்கு நியாயம் என்று பட்டதை நிலை நிறுத்துகிறார்கள்.

ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை. ராஜீவ் கொலை தொடர்பான கோப்புகள் நரசிம் மராவ் காலத்திலேயே அலுவலகத்திலிருந்து காணாமல் போய் விட்டது. சுப்பிரமணியசுவாமி. சந்தி ராசுவாமி உள்ளிட்டோர் மீதான விசாரணையை முழுமை பெற வில்லை.

நான்காம் கட்ட ஈழப்போர் நடைபெற்றபோது ராகுல்காந்தி தனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனது கணக்கு தீரவில்லை என்றார். ஒன்னரை லட்சம் ஈழத் தமிழர். மக்கள் சிங்கள இனவெறி அரசால் இந்திய அரசின் துணை யோடு படுகொலை செய்யப்பட் டனர்.

சீக்கிய மக்களிடம் பசப்புவதைப் போலவே தமிழ்நாட்டிலும் ராகுல் காந்தி தமிழக மக்களிடமும் பேசுக் கூடும் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Pin It