நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆர்.முத்து கிருஷ்ணன் என்பவர், சென்னைக்கு ஒரு வேலை காரணமாக மாற்றலாகி வந்தார். சென்னையில் புதிதாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியபின், வீட்டில் சமைப்பதற்காக புதிய சமையல் எரிவாயு இணைப்புக் கேட்டு விண்ணப்பித்தார்.

நாகையில் இருக்கும், இணைப்பைத் துண்டித்துக் கொண்டால் தான் சென்னையில் இணைப்புக் கிடைக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம், எரிவாயு உருளைத்தருவதற்கு மறுத்தது.  சென்னை உயர்நீதிமன்றத்தில், இதனை எதிர்த்து வாதாடினார் முத்துக்கிருஷ்ணன்.

இவ்வழக்கில், 05.4.2012 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வீ.இராம சுப்ரமணியன், ஒருவர் ஒரு எரிவாயு உருளை தான் வைத்துக் கொள்ள முடியும் என்று கூறி, முத்துக்கிருஷ்ணனுக்குத் தீர்ப்பு வழங்கினார். (காண்க: தி இந்து, 06.04.2012).

இந்நிலையில், ‘ஒரே வீட்டிற்கு ஒரு எரிவாயு இணைப்பு’ என்ற புதிய முழக்கத்தின் அடிப்படையில், இந்தியாவெங்கும் ஒரே முகவரியில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட எரிவாயு .இணைப்புகளைத் துண்டிக்கவிருப்பதாக இந்திய அரசின் பெட்ரோலியத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், இந்தியா முழுவதிலுமுள்ள தனது வாடிக்கையாளர்களை மீண்டும் பதிவு செய்து கொள்ளக் கோரியது. அதனைத் தொடர்ந்து, 12.97 இலட்சம் எரிவாயு இணைப்புகள் ஒரே முகவரியில் இருப்பதாகக் கூறி, துண்டிக்கப்பட்டன.

இவ்வாறு ஒரே இணைப்பைக் கொண்டு, நாம் பெறுகின்ற, சமையல் எரிவாயு உருளைகளைப் பெற வேண்டுமானால், பதிவு செய்து விட்டு சற்றொப்ப 1 மாதம் காத்திருக்க வேண்டும்.

இவ்வளவும் சாதாரண மக்கள் அன்றாட சமையலுக்கு சந்திக்கும் அன்றாட சிக்கல்கள். ஆனால், இந்த விதிகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் சாதாரண மக்களுக்குத்தான் என்பதும், மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்டதாக’ சொல்லப்படும் மக்கள் ‘பிரதிநிதி’களான அரசியல்வாதிகளுக்கு இவை கிடையாது என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான கே.கோ பாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இன்டேன் சமையல் எரிவாயு உருளை நிறுவனத்திடம், தமிழக முதல்வர் செயலலிதா உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எவ்வளவு எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று வினாக் கேட்டு விண்ணப்பித்து தகவல் பெற்றார். அதன் படி அவர் பெற்ற தகவல்கள்தான் இங்கு பட்டிய லாக வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு மட்டும் செயலலிதா தனது வீட்டிற்கு சற்றொப்ப 206 எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தியுள்ளார். அமைச்சர் கோகுல இந்திராவோ, கடந்த ஆண்டிற்கு 44 உருளைகளும், இந்தாண்டு 46 உருளைகளும் பெற்றுள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் இருப்பதாக வந்தப் புகார்களைத் தொடர்ந்து, எரிவாயு விநியோக நிறுவனங்கள் இணைப்பு விவரங்கள் அனைத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதை இணையத்தில் வெளியிட்டன. அதை நாம் துழாவினோம்.

இன்டேன் எரிவாயு நிறுவன இணையத்தில் நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, இவ்வாண்டில் முன்னாள் தி.மு.க.  அமைச்சர் சுப. தங்கவேலன் அவர்களுக்கு, 25 உருளைகளும், அ.தி.மு.க. அமைச்சர்கள்  செயபால் முகவரிக்கு 20 உருளைகளும், எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகவரிக்கு 19 உருளைகளும், வி.எஸ்.விஜய் முகவரிக்கு 18 உருளைகளும், ஆர்.வைத்தி லிங்கம் முகவரிக்கு 17 உருளை களும், பி. பழனியப்பன் முக வரிக்கு 17 உருளைகளும் இது வரை விநியோகிக்கப்பட் டுள்ளன.

இவை அனைத் தும், பதிவு செய்து கொண்ட சில நாட்களில், கிடைத்த எரி வாயு உருளைகள்.

இவ்வாறு, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய எரிவாயு உருளைகளை மானிய விலையில் எடுத்துக் கொள்ளும் இந்த ‘மக்கள்’ பிரதிநிதி களை கண்டு கொள்ளாத எரிவாயு நிறுவனங்கள்,  எளிய மக் களைமட்டும் வாட்டி வதைக்கலாமா?

gas