இந்தியா முழுமையும் பா.ஜ.க. பிடிக்குள் வந்திருப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை அக்கட்சி உருவாக்கி வருகிறது. உண்மையில், இந்தியாவின் 29 மாநிலங்களில் உள்ள 4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை 1516 மட்டும்தான். அதுவும் பெரும்பாலான 950 சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத், மகாராஷ்டிரா, கருநாடகம், உ.பி., ம.பி., இராஜஸ்தான் என்ற 6 மாநிலங்களில் மட்டும் இருக்கிறார்கள். 10 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. மாநிலங்கள் வாரியாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் விவரம்:

தமிழ்நாடு  -  ஒருவர்கூட இல்லை

சிக்கிம்  -       ஒருவர்கூட இல்லை

மிசோராம்     -  ஒருவர்கூட இல்லை

ஆந்திரா    -   175 எம்.எல்.ஏ.க்களில்  பா.ஜ.க. 4 பேர்

கேரளா       -   140  எம்.எல்.ஏ.க்களில்  பா.ஜ.க. ஒருவர் மட்டும்

 பஞ்சாப்  - 117  எம்.எல்.ஏ.க்களில்   பா.ஜ.க. 3 பேர்

மேற்கு வங்கம்   -   294  எம்.எல்.ஏ.க்களில்     பா.ஜ.க. 3 பேர்

தெலுங்கானா  - 119  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 5 பேர்

டெல்லி            -           70  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 3 பேர்

ஒடிசா  -           147 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 10 பேர்

நாகலாந்து       -  60 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 12 பேர்

பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் என்ன நிலை?

மேகலாயாவில் 60 சட்டமன்ற உறுப்பினர் களில் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ள பா.ஜ.க. - கூட்டணி ஆட்சி நடத்துகிறது.

பீகாரில் 243 சட்டமன்ற உறுப்பினர்களில் 53 இடங்களை மட்டுமே பெற்றுள்ள பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இடம் பிடித்துள்ளது.

கோவாவில் 40 எம்.எல்.ஏ.க்ககளில் 13 இடங்களைப் பெற்றுள்ள பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடத்துகிறது.

ஐம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 87 இடங்களில் 25 இடங்கள் மட்டுமே பெற்று பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இடம் பிடித்திருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் உள்ள உ.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. கடும் தோல்வியையே சந்தித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியிருந்த கர்நாடகாவில் பா.ஜ.க.வுக்கு நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்தியா முழுவதையும் பா.ஜ.க. பிடித்து வருகிறது என்று தம்பட்டமடிப்பது அப்பட்டமான பொய்!

Pin It