2011 ஜூலை 2, 3, சனி, ஞாயிறு ஆகிய நாட்களை, கோவை மாவட்டம் சூலூரில், பெரியாரியல் பயிலரங்கத்தில் பங்கு பெற்ற தோழர்கள் தாங்கள் தெரிந்து கொண்ட செய்திகளையும், தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஆதிக்கச் சாதியில் பிறந்து, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, சாதி வெறியராகவும், மத வெறியராகவும் இருந்து, பெரியாரியல்வாதியாக மாறி இப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட தோழர் நிர்மல்குமார் பகிர்ந்து கொண்ட கருத்து:
“நானும், எனது நண்பர்களும் வெளியூர் கோவிலுக்கு செல்லும்போது ஓட்டலில் சாப்பிடுவோம். பக்திமானாக இருந்தபோதே அசைவ உணவு விரும்பியாக இருந்தேன். இதை பற்றிய விவாதங்கள் வருகிறபோதும், எனக்கு தெரிந்தவைகளையும், கடவுளை பற்றிய எனது சுய கருத்துகளையும் சொல்கிறபோது, என்னை நாத்திகன் என்றும், பெரியார் கட்சிக்காரன் என்றும் சொல்வார்கள். எனக்கு அப்போது பெரியாரைப் பற்றியெல்லாம் தெரியாது. நான் ஒரு சாதி வெறியனாக, ஆதிக்கசாதி திமிரோடு தாழ்த்தப்பட்டவர்களை மிரட்டுபவனாக இருந்ததால் என்னை எனது சாதிக்காரர்கள் பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தியே வந்தார்கள். பெரியார் சாதி ஒழிப்புக் கொள்கையாளர் என்பது எனக்குத் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால், நான் பெரியார் இயக்கங்களுக்கு கடுமையான எதிரியாக இருந்திருப்பேன். கடவுள் மறுப்பாளராக பெரியாரை அறிந்து, பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து, இப்போது தெரிந்து கொண்டேன். சாதி ஒழிப்பே மிக முக்கியம் என்பதை!

எங்கள் கிராமத்திலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், பல்வேறு தீண்டாமை கொடுமைகள் நிலவி வருவதை உணர்ந்து, குறிப்பாக தேநீர் கடைகளிலுள்ள இரட்டைக் குவளைகளுக்கு எதிராக சண்டையிட்டு, பல கடைகளில் அதை நீக்கியிருக்கிறேன். அனைவருக்கும் ஒரே மாதிரியான புதிய குவளைகள் வாங்குவதற்கு பணம் இல்லை என்று ஒரு கடையில் சொன்னார்கள். நான் சொன்னேன்... “பொதுக் குவளை வைப்பதற்கு பணம் இல்லை என்பதுதான் சிக்கல் என்றால், நீங்கள் இரட்டைக் குவளைகளையே பயன்படுத்துங்கள். பெரியார் கட்சியை சார்ந்தவர்களோ, அல்லது யார் வந்து கேட்டாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. இதுவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கிய குவளையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வழங்கிய குவளையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மாற்றிக் கொடுங்கள்” - என்று சொன்னேன். அடுத்த நாளே அனைவருக்கும் பொதுவான புதிய குவளை மாற்றப்பட்டது.
என்னை ஆதரித்து வந்த எனது சாதிக்காரர்கள், இப்போது என்னை எதிரியாக பார்க்கிறார்கள். என்றாலும், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பின்வாங்கு கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த எனது தகப்பனாரிடம், பெரியார் பற்றியோ, பெரியார் தி.க. பற்றியோ தவறான ஒரு காரணத்தை சொல்லும்படி கேட்டேன். குறை சொல்ல சரியான காரணம் இல்லாததால் எனது தந்தையின் எதிர்ப்பும் இப்போது இல்லை. உயர் சாதிக்காரர்களிடம் நம் சாதியை இழிவுபடுத்துகிறான் என்றும், தாழ்த்தப்பட்டவர்களிடம் கடவுளை இழிவுபடுத்துகிறான் என்றும், காவல்துறையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்றும், சாதி வெறியோடு இருக்கும் இன்னும் சிலர் மட்டுமே, ஒவ்வொருவரிடமும் என்னைப் பற்றி வெவ்வேறான புகார்களைச் சொல்லி முடக்க நினைக்கிறார்கள்.
சாதி பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். அவர்களிடம் நான் சொன்னேன்.... “நீங்கள் சொல்வதற்காகவோ, பெரியாரியல்வாதியாக ஆனதற்காகவோ அல்ல, என்றைக்கு பெரியாரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேனோ, அன்றே முடிவு செய்துவிட்டேன், எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது தாழ்த்தப்பட்ட பெண்ணுடன்தான்” - என்று. தாழ்த்தப்பட்டவர்களும் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்கு பாடுபடுகிறார்கள். ஆனாலும் இன்னும் ஒரு ஆண்டிற் குள் குறைந்தபட்சம் என்னைச் சுற்றியுள்ள கிராமங்களில் தேநீர் கடைகளில் இருக்கும் இரட்டைக் குவளைகளை ஒழித்தே தீருவேன் என்று உறுதி கூறுகிறேன்” - என்று சூளுரைத்தார், அந்த இளைஞர்.
சூலூர் பயிற்சி முகாமில் பங்கேற்ற பல இளைஞர்கள் தங்களது கொள்கை உறுதியை வெளிப்படுத்தினார்கள். சூலூர் கழகச் செயல் வீரர்கள் பயிற்சி முகாம், உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். (குறிப்பு: கடந்த இதழில் சூலூர் பயிற்சி முகாம் செய்திக்கான தலைப்பில் பொள்ளாச்சி என தவறாக வெளிவந்துள்ளதை தோழர்கள் திருத்திப் படிக்கக் கோருகிறோம்)
பெரியார் தொழிலாளர் கழக முடிவுகள்
2.7.2011 மாலை 4 மணியளவில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி கழகம் சார்பில் கழக தொழிற்சங்கமான ‘பெரியார் தொழிலாளர் கழகம்’ என்ற தொழிற் சங்கம் நங்கவள்ளி கே.வி.ஆர். என்ற தனியார் ஸ்பின்னிங் மில்லில் தொடங்குவது குறித்த கலந்துரை யாடல் கூட்டம், நங்கவள்ளி இராசேந்திரன் ‘சுடர் மின்கல பணி மையத்தில் மாநில பெரியார் தொழி லாளர் கழகத் தலைவர் கோபி. இளங்கோவன் தலைமையில் கழக தொழிற்சங்க மாநில பொரு ளாளர் கோபி. கருப்பண்ணன், சேலம் மாவட்ட கழக செயலாளர் அ. சக்திவேல், கழக அமைப்பாளர் நங்க வள்ளி சீ. அன்பு, மேட்டூர் நகர தலைவர் அ. அண்ணா துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
எதிர்வரும் 12.7.2011 மாலை 3 மணியளவில் நங்கவள்ளி கே.வி.ஆர். ஸ்பின்னிங் மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து ‘பெரியார் தொழிலாளர் கழகம்’ என்ற கழக தொழிற்சங்க தொடக்க விழா நடத்துவது எனவும்.
தொடக்க விழாவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்து சங்க பெயர் பலகை திறந்து கொடியேற்று நிகழ்ச்சியினை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சங்க புதிய பொறுப்பாளர்களாக சங்க தலைவர் - கா.கொ. சிவக்குமார், செயலாளர் - நா.குமார், பொருளாளர் - பா. செந்தில்குமார், துணை தலைவர் - து.கணேசன், துணை செயலாளர் - மா. அருள்குமார், சட்ட ஆலோசகராக எம்.கே. அர்ச்சுணன் ஆகியோர் மாநில தொழிற்சங்க தலைவர் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நங்கவள்ளி கிஷ்ணன், அருள் செல்வன் ஆர்.எஸ். நாகராஜ், மேட்டூர் அனல் மின் நிலைய கழக தொழிற் சங்க பொருளாளர் அ.இராமச் சந்திரன், செந்தில் மற்றும் கழக தொழிற் சங்க உறுப்பினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டு நங்கவள்ளி கிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
திருப்பூரில் இந்துத்துவ சக்திகளுக்கு பதிலடி
19.6.2011 அன்று மாலை 6 மணிக்கு திருப்பூர் கொங்குமெயின் சாலையில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. செ. செகநாதன் தலைமை வகித்தார். கழகப் பேச்சாளர்கள் காசு. நாகராசு, கோபி. வேலுச்சாமி சிறப்புரையாற்றினர். காவை இளவரசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றது..
பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ஊர்வலமாக வந்த இந்துமத வெறியர்கள், பாரத் மாதாகி ஜே என்று முழக்க மிட்டனர். அவர்களுக்கு பதிலளித்து காசு. நாகராசு உரையாற்றினார். கா.சு. நாகராசு, கோபி வேலுச்சாமி உரையை பொது மக்களை சிந்திக்கச் செய்தது. க. சீனிவாசன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சு. துரைசாமி, மாநகர தலைவர் இரமேசு பாபு, மாநகர செயலாளர் முகில்ராசு, அகிலன், கிளாகுளம் செந்தில், பாடகர் தியாகு, பல்லடம் விஜயன், சூலூர் வீரமணி, மூர்த்தி, ஜீவா நகர், சாமுண்டி புரம், மாஸ்கோ நகர் வெள்ளியங்காடு தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். செகநாதன், சீனிவாசன் மற்றம் தோழர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் திருந்தனர்.
இராஜபக்சேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கழகப் பொதுக் கூட்டம்தமிழீழ மக்கள் மீது தவறான போரை நடத்தி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் 24.6.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் வெள்ளியங்காடு 60 அடி சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மாநகர கழகத் தலைவர் இரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாடகர் தியாகு, அவிநாசியப்பன் ஆகியோர் பாடல்களை பாடினர். பலலடம் திருமூர்த்தி ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடத்தினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் மாவட்ட செயலாளர் கருமலையப்பன், மாவட்ட தலைவர் துரைசாமி, ம.தி.மு.க. நகரச் செயலாளர் சு. சிவபாலன், 15 வேலம்பாளையம் நாகராஜ், கழக மாநகர் செயலாளர் முகில்ராசு, ஒன்றிய தலைவர் அகிலன் விஜயகுமார், சண். முத்துக்குமார், பாண்டியநாதன், ஆடிட்டர் குணசேகரன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன், கமல், முரளி, தினேஷ், மnந்திரன், தினேஷ் குமார், கார்த்தி, கலை, பிரகாஷ், இராஜேஷ், குகன் ஆகியோர் செய்திருந்தனர்.
அரூரில் ராஜபக்சேவின் போர்க் குற்றங்கள் விளக்கம்
அய்.நா. வல்லுநர் குழு அறிக்கையும், தமிழர் கடமைகளும் பொதுக் கூட்டம் 29.06.2011 மாலை 6 மணிக்கு அரூரில் நடை பெற்றது. முன்னதாக சமர்பா குமரன் குழுவினர் இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட கழக அமைப்பாளர் கொ. வேடியப்பன் தலைமை வகித்தார். அ. இளம்பரிதி, நெ.த. அறிவுடை நம்பி, கணேசன், நஞ்சப்பன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராசுகுமார் வரவேற்றார். கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, தமிழின மான மீட்பு இயக்க க. சிவக்குமார், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மைய அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, கழக பொதுச் செயலாளர் கோவை கு. இராம கிருட்டிணன் ஆகியோர் சிறப்புi ரயாற்றினர். பெரும் திரளாக தமிழின உணர்வாளர் களும், கழக ஆதரவாளர்களும் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் மாநாடு போல் காட்சியளித்தது.
பெருந்துறையில் கழகக் கூட்டம்
பெரியார் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் பெருந்துறை, பழைய பேருந்து நிலையத்தில் 10.6.2011 வெள்ளி மாலை 7 மணிக்கு நடைபெற்றது. 6.30 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பழைய பேருந்து நிலையத்தில் கொடியேற்றி வைத்தார்.
பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். காவை. இளவரசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி, தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் பெரியார் கொள்கை விளக்கவுரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு ஈரோடு ரத்தினசாமி, நாத்திகசோதி, திருப்பூர் துரைசாமி, முகில் ராசு, ஆசிரியர் சிவகாமி, கிளாகுளம் செந்தில், விஜயமங்கலம் ஜெகன், கோபி. ஆனந்தராஜ், நிவாசு, செயராமன், நாகப்பன், இறையலன் மூர்த்தி, அருளானந்தன், பிரகாசு, ஈரோடு பகுத்தறிவாளர் பேரவை தோழர்கள் உள்பட ஏராளமான தோழர்கள் , பொது மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, மேடை ஒலிப்பெருக்கி வழங்கினார். ஒலி, ஒளி, திருப்பூர் பெரியார் முத்து அமைத்துக் கொடுத்தார். இரவு உணவு, கழக ஆதரவாளர் பெருந்துறை சரவணன் (பிரைட் ஸ்டார்) வழங்கினார். நிகழ்ச்சியை கூதாம்பி துரை, அர்ச்சுணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பட்டுக்கோட்டையில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பொதுக் கூட்டம்
4.7.2011 திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில், அழகிரி சிலை அருகில் ஐக்கிய நாடுகள் சபை ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தியும், சமச்சீர் கல்வியை தமிழக அரசு முழுமையாக அமுல்படுத்தக் கோரியும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழக ஒன்றிய அமைப்பாளர் கு.பாரி தலைமையேற்றார். தமிழ்த் தேச கூட்டமைப்பைச் சார்ந்த மன்னர் மன்னன் வரவேற்றுப் பேசினார். ஐ.நா. அறிக்கையைப் பற்றி கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சமச்சீர் கல்வி பற்றி தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதம்பை சி.இராமசாமி, ஆண்டனி, செந்தோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராபூரணி பகுதி கழகத் தோழர் திருவேங்கடம் நன்றி கூறினார்.
தி. ஸ்டாலின் - து. ருமேனியா வாழ்க்கை ஒப்பந்தம்
6.7.2011 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி எம்.எல். திருமண மண்டபத்தில் அரியூர் தி. ஸ்டாலின் - திருவையாறு து. ருமேனியா ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டிற்கு ரூ.2000 வழங்கினர்.
நன்கொடை
நாமக்கல் தோழர் மு. கேப்டன் அண்ணாதுரை அவரது தாயார் லட்சுமி அம்மாள் நினைவாக முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.100 வழங்கினார்.