உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதிபெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார்.

“இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமதுநாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப்போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியதுஅவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள்என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன்.இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூறமுடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவேஇருக்கிறது.

ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும்செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும்மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது சுயநலக்கூட்டத்தாரின் பொறுக்க முடியாத கொடுஞ்செய்கை என்று உணர்ச்சிஏற்பட்டுவிட்டால் சமத்துவத்தை அடைவதற்கே முயற்சி செய்வார்கள். தேவேந்திரகுல வேளாளர் என்ற உயர்ந்த பதத்தால் கூறப்படினும், தாழ்த்தப்பட்டுத் தொடுவதற்குஅருகதையற்றுக் கிடப்பதால், சுயமரியாதை உணர்ச்சி வந்துவிட்ட பிறகு சமத்துவத்தைஅடைவதற்கே முயற்சி செய்வான். இப்போதிருக்கும் கஷ்டமெல்லாம் தாழ்ந்தசமூகத்தவரென்று எல்லோராலும் இகழப்பட்டு அழுத்தி வைக்கப்பட்டிருப்பதால், இதிலிருந்து எழும்ப வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது.

பிறர் உங்களைப் பள்ளர், பறையர் என்று சொல்லி நீங்கள் கேவலமானவர்கள்என்று கருதப்பட்டால், அவர்கள் அதைவிடக் கேவலமானவர்கள் என்றேசொல்லுவேன். அவ்வாறு உங்களைக் கேவலமாகக் கருதுகிறவர்களுக்குள்ளபெயரைவிட உங்கள் பெயர் கேவலமானதல்ல. யாரேனும் என்னைப் பள்ளன், பறையன் என்று அழைப்பது மேலா, சூத்திரன் என்று அழைப்பது மேலா என்றுகேட்டால், சூத்திரன் என்று அழைக்கவே கூடாது; பள்ளர், பறையர் என்றுஅழைப்பதுதான் மேல் என்று சொல்லுவேன். ஏனென்றால், சூத்திரன் என்னும் பெயர்அந்தப் பெயர்களைவிட மிக மிக இழிந்ததாகும். ஜனத்தொகை எடுக்கும்போது நான்பள்ளர், பறையர் என்று தான் சொல்லுவேன். பள்ளர், பறையர் என்பவர்களாகிலும்சொந்தத் தாய் தகப்பன்மார்களுக்குப் பிறந்தவர்களாகிறார்கள்.

ஆனால். சூத்திரர்என்பவர்களோ, பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்என்று அழைக்கப்பட்டுப்போய்விட்டது. இப்பொழுதுள்ள இராஜாங்கத் துறையின் வித்தியாசத்தால்வேண்டுமானால் அப்படி இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பழையஇராமராஜ்யம் வருமானால் அப்படித்தானிருந்தாக வேண்டும்.

நீங்கள் உங்களை வேளாளர்கள் என்று அழைத்துக் கொள்ளஆசைப்படுகிறீர்கள். வன்னியர்கள் தங்களை Bத்திரியர்கள் என அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். செட்டியார்கள் வைசியர்களென அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதெல்லாம் எதற்காக? நீங்களே உங்களைத்தாழ்மைப்படுத்திக் கொள்வதற்கொப்பாகிறதே என்றால், ‘என்ன அய்யா!இப்பொழுது தான் எங்கள் பெற்றோர்களைத் திருத்திக் கொண்டிருக்கிறோம்.அதற்குள் இப்படிக் கீழே தள்ளுகிறீர்களே?’ என்கின்றனர். நாடார் பெருமக்களும்ஆரியர் வழியைப் பின்பற்றுவது போன்று குறுக்கே பூணூல் போட்டிருந்தனர்.அவைகளை எல்லாம் அறுத்தெறியுங்கள் என்றபோது ஓர் அன்பர், ஏனய்யா, இவ்வளவு காலம் போராடி இந்த பூணூல் போடுவதற்கு இவ்வளவு காலமாயிற்று.

அந்த நூலில் அழுக்கு ஒட்டுவதற்குமுன் அறுத்தெறியச் சொல்லுகிறீர்களே என்றுவருந்தினார். இவ்வாறு Bத்திரியர் என்றும், வைசியரென்றும், வேளாளர் என்றும்அழைத்துக் கொள்ள ஆசைப்படுவதும், பூணூல் முதலியன போட்டுக்கொள்ளஆசைப்படுவதும் தன் சாதியைத் தவிர தனக்கு மேல் பெரிய சாதி இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு, தாங்கள் அந்தச் சாதிக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டவர்களாகிறார்கள். எல்லோருக்கும் உயர்ந்த சாதியான் என்று கூறிக்கொள்ளுகிறவன், Bத்திரியரை வைசியனுக்கு மேல் உயர்ந்தவனென்றும், வைசியனைச் சூத்திரனுக்கு மேலானவனென்றும் பாகுபடுத்திக் கூறினாலும் அவன்இந்த இரண்டு பேரையும் ஒரே கண்ணுடன் பார்த்து, ஒரே முறையில்தான்நடத்துகிறான். ஆகவே, இந்த மூன்று பேர்வழிகளுக்குள் அவனுக்கு யாதொருவித்தியாசமுமில்லை.

இரயில்வே முதலிய சிற்றுண்டி சாலைகளுக்கும், சாப்பாட்டுவிடுதிகளுக்கும் சென்று பார்ப்போர் இதை உணருவதில்லையா? அங்கேசாப்பிடுவதற்கு இரண்டு பாகங்கள்தானிருக்கின்றன. ஒன்றில் பார்ப்பான்சாப்பிடுவதற்கும், மற்றொன்றில் Bத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய எல்லோரும்சாப்பிடுவதற்குமே இருக்கின்றன.

ஆகவே, இதில் என்ன வித்தியாசத்தைக்காண்கிறீர்கள்? உண்மையில் அவன் மட்டும் உயர்ந்தவனாகவும், மற்ற மூன்று பேரும்அவனுக்கு ஒரே முறையில் தாழ்ந்திருப்பதாகவேதானே அவ்வறைகள் உணர்த்துகின்றன? பிறகு எதற்காக நீங்கள், நான் Bத்திரியன், நான் வைசியன், நான்வேளாளன் என்று உயர்வு தாழ்வு பேசுகிறீர்கள்? இதெல்லாம் உங்களை ஒற்றுமையில்லாதிருக்கச் செய்யும் சூழ்ச்சி முறை என்பதை நீங்கள் உணருகிறீர்களில்லையா?

ஆகையால் சாதிப் பிரிவினையால் ஒரே ஒரு கூட்டத்திற்குத்தான் சவுகரியம்; மற்றையோருக்கு ஒற்றுமைக் குறைவு ஏற்படுவதுதான் இலாபம்.ஆகையால், முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத்தன்மை என்பது இந்தநாட்டைவிட்டு ஒழிய வேண்டுமா, வேண்டமா என்ற முடிவு தெரிந்துவிடவேண்டும்.இரண்டாவதாக, ஒரு மனிதனுக்குக் கீழோ, மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்றமுடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல், சாதி வித்தியாசத்திற்குஆதாரமாயுள்ளவைகளை அடியோடு அழிக்க முயல வேண்டும். அப்படிச் செய்யாமல், உயர்வு தாழ்வைப் போக்கி விடலாமென்று கருதுதல் நுனி மரத்தில் நின்று கொண்டுஅடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும்.

‘திராவிடன்’ 5.10.1929

Pin It