* கீதையின் காலம் குறித்தும் - அது ஒருவரால் தான் இயற்றப்பட்டது என்பது குறித்தும் - குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன.

* “சாதியக் கட்டமைப்பின் இறுக்கம் நொறுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் மீண்டும் சாதியக் கட்டுமானத்தை வலிமைப் படுத்தவே கீதை வந்தது என்கிறார், ஆய்வாளர் டி.பி.ஹில்.

* பாரதப் போரில் அர்ச்சுணனுக்கு, தேரோட்டுபவனாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய அறிவுரைதான் கீதை என்ற கருத்தை ஏற்க இயலாது. போர்க் களத்தில் போர்ச் சூழல் பற்றிய உரையாடல்கள் தான் நடந்திருக்க முடியுமே தவிர வேறு பல தத்துவங்கள் பற்றிப் பேச, போர்க் களம் உரிய இடமாக இருக்காது. எனவே கீதையின் உள்ளடக்கம், பிற்காலத்தில் விரிவுபடுத்தி எழுதப் பட்டது என்பது பல ஆய்வாளர் களின் கருத்து. ஆனால் பகவத்கீதை இறைவனால் ‘அருளப்பட்டது’ என்று பார்ப்பனர்கள் கூறு கிறார்கள்.

* கீதை - ஒரு வரலாற்று நிகழ்வு என்பது சந்தேகத்துக்குரியது என்கிறார் காந்தியார். கீதையில் இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறார் டாக்டர் இராதாகிருஷ்ணன். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட வர்கள் கீதையை எழுதினார்கள் என்பதை மட்டும் அவர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.

* கீதை எழுதப்பட்ட காலம் கி.மு.500 முதல் கி.பி. 300 வரை என்கிறார்கள். அதாவது 800 ஆண்டுகால இடை வெளியில் கீதை எழுதப்பட்டதாம். காலத்தைத் தவறாக நிர்ணயிக்க முயலுகிறார்கள் என்று சந்தேகத்தையே இது உருவாக்கு கிறது. உண்மையில் கி.பி.400க்குப் பிறகே கீதை எழுதப்பட்டுள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.

* இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸ் வேண்டு கோளை ஏற்று, கி.பி.1785-ல் சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதன்முதலாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல மேலை நாட்டு ஆய்வாளர்கள், இதற்குப் பிறகு தான் கீதையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினர்.

* பவுத்த மதம் தோன்றுவதற்கு முன்பே கீதை எழுதப்பட்டு விட்டது என்ற நேருவின் கருத்தை, வரலாற்று ஆய்வாளர் டி.டி. கோசாம்பி மறுக்கிறார். “காந்தியின் ஆசிரமத்தில் நாள்தோறும், கீதையின் இரண்டாவது அத்தியா யத்தில் உள்ள சுலோகங்கள் 55 முதல் 82 வரை பசனைப் பாடல் களாகப் பாடப்பட்டு வந்தன. இவை பவுத்தக் கருத்துக்களையே எதிராக வைக்கின்றன. பவுத்தக் கோட்பாடுகளைப் பற்றிய புரிதல் இல்லாமல், இந்த சுலோகங்களை எழுதியிருக்கவே முடியாது. பவுத்தம் கூறிய ‘கரும வினை யிலிருந்து விடுபடுதல்’ என்ற தத்துவத்தையே, இந்த சுலோகங்கள் கூறுகின்றன” என்கிறார் ஆய்வாளர் டி.டி. கோசாம்பி.

* கடந்த 16 நூற்றாண்டுகளாக பகவத் கீதை இந்துக்களால், பார்ப்பனர் களால் பக்தி யுடன் படிக்கப்பட்டு வருகிறது. இருந்தும், இந்தக்களின் ஒழுக்க நெறியை கீதை ஏன் வளர்க்கவில்லை?

* ரிக் வேத காலத்தில் கருநிறம் கொண்ட ‘அரக்கனாக’ ஆரியர் களால் ஒதுக்கப்பட்ட கிருஷ்ணன், பகவத் கீதையில் விஷ்ணுவின் அவதாரமாக உயர்த்தப்படுகிறான். என்ன காரணம்? ஆரியரல்லா தோருக்கு முக்கியத் துவம் கொடுத்து பார்ப்பனியத்தை மக்களி டையே பரவலாக்குவதற்கான சூழ்ச்சியே, இது

* நூலாசிரியர் பிரேம்நாத் பசாஸ் கூறுகிறார்: “சத்திரியர்கள் தான் பவுத்தப் புரட்சியை முன்னின்று நடத்தினர். பவுத்தப் புரட்சியை நசுக்கும் முயற்சிகளுக்கு இடை யூறாக இருக்கக் கூடியவர்களும் சத்திரியர்கள் தான். எனவே புதிய பார்ப்பனியத்தின் பாடலை (கீதையை) சத்திரியர் வாயில் பாட வைத்தனர். அதுவே புரட்சியைப் புறங்காணுவதற்குப் போதுமான தாக இருந்தது.

            பார்ப்பனியத்திடம் பவுத்தம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்ட அந்தச் சூழலில், கீதை ஆசிரியன், அர்ச்சுனனது பாத்திரத் தில் சித்தரிக்கும் இளைஞனைப் போன்ற படித்த, படிக்காத எண்ணற்ற இளைஞர்கள் இந்தியா வில் இருந்திருக்க வேண்டும். அந்த இளைஞர்களைக் கவர்ந்து இழுத்து, தங்கள் வலையில் சிக்க வைக்கவும், வேதாந்த மதத்தில் பிடிப்புள்ளவர்களாக மாற்றும் வஞ்சக நோக்கத்துடனும்தான் பகவத்கீதை இயற்றப்பட்டது” என்கிறார் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’யை எழுதிய நூலாசிரியர் பசாஸ்.

* “ஈவிரக்கமற்ற குரூரம், தார்மீக மதிப்புகள் அனைத்தையும் கை விடுதல், மனித நேயமற்ற செயல் களில் ஈடுபடுதல், நாகரீகமின்றி நடந்து கொள்ளுதல், மூர்க்கத்தனம் ஆகிய அனைத்தும் மகாபாரதம் போரின்போது கடைபிடிக்கப் பட்ட தீ நெறிகளாகும். இத் தீய நெறிகள்தான் மனித உள்ளத்தில் அவ நம்பிக்கையும், உருவாக்கக் கூடியவையாக இருந்தன. இந்த அவநம்பிக்கையும் சரணாகதி உணர்வும், மறு உலக நம்பிக்கை யும் தான் கீதை உரைக்கும் தத்துவத்தின் அடிப்படைகளாகும்” என்று அழுத்தமாகக் கூறுகிறார் நூலாசிரியர் பசாஸ்.