ஊழலுக்கு எதிராக பாஜக எடுத்த நடவடிக்கைகள் என்ன?

2013 ஆம் ஆண்டு ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் – 1136, 2014 ஆம் ஆண்டு – 993, 2015 ஆம் ஆண்டு 878, 2016-ம் ஆண்டு 71 லோக்பால் அமைப்பு – இது ஊழலை விசாரிக்கும் அமைப்பு.பிரதமர், முன்னாள் பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் குரூப் ஏ,பி,சி,டி பிரிவு அதிகாரிகள், அரசிற்கு தொடர்புடைய ஆணையங்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், 10 லட்சத்திற்கு மேல் அந்நிய நாட்டிலிருந்து நிதியுதவி பெரும் அமைப்புகள் – ஆகியவைகள் குறித்து விசாரிக்க முடியும்.

இந்த அமைப்புக்கான மசோதா காங்கிரஸ் ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளாக லோக்பால் அமைப்பு ஏன் உருவாக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.

லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதன் முடிவுகள் என்ன?

தொகுப்பு : மனோஜ்

(தொடரும்)