சாதாரணமாக இந்த விளக்கை எடுத்துக் கொண்டால் கூட, இதுவும் படிப்படியாக எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து வந்திருக்கிறது. நெருப்பு, அகல்விளக்கு, கிரோசின் விளக்கு, பவர்லைட், கியாஸ்லைட், எலெக்ட்ரிக் லைட் என்று முன்னேறி விட்டது.

இன்று எவ்வளவு தான் பக்தனாயிருந்தாலும், அவன்கூட மின்சார விளக்கில்தான் தன் பிரார்த்தனையை செலுத்த ஆசைப்படுகிறான். பல மதங்களும் கணக்கற்ற தெய்வங்களும் பெரிய ரிஷிகளும் முனீஸ்வரர்களும் பல தீரர்களும் சூரர்களும் நம் நாட்டில் தோன்றியிருந்தும், அவர்களால் எல்லாம் இப்படிப்பட்ட காரியத்திற்கு ஒரு பயனும் ஏற்படக் காணோம்? இவர்களில் ஒருவருக்காவது இப்படிப்பட்ட ஒரு சாதனத்தைக் கண்டுபிடிக்க கூடிய சக்தியை, நமக்கு அளிக்கத் திறனில்லாமற் போய்விட்டது. உலகம் எவ்வளவோ முன்னேறியும் நாம் மட்டும் இன்னும் காட்டுமிராண்டிகளாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.                                     

 - ‘விடுதலை’ 17.5.1957