periiyarr 450தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டைப் போட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக் கொள்ள, ஏழை மக்களை - பாமர மக்களைப் பலி கொடுப்பதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

(குடிஅரசு - 20.11.1932)

பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம், தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பது பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறோம். ‘தேசியம்' என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை.

(குடிஅரசு - 19.03.1933)

- பெரியார்

Pin It