“இலங்கை ராணுவம் போரை நிறுத்த வேண்டும்”

இது முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஒருமித்த தீர்மானம். தமிழகக் கலை உலகமே திரண்டு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணா விரதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இதுதான்! ஆனால், பார்ப்பன ஏடுகள் என்ன கூறுகின்றன?

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, தமிழக முதல்வர் கலைஞர் கூட்டிய அன்று காலை (அக்.14, 2008) மாலினி பார்த்தசாரதி என்ற இந்து ஏட்டின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த பார்ப்பன அம்மையார் - கட்டுரை ஒன்றை எழுதினார். அதன் தலைப்பு ‘தமிழ் இனவெறியின் ஆபத்துகள்’ (The dangers of Tamil Chauvinism)

“The Sri Lankan army, just two kilometers away from the LTTE’s administrative capital, Kilinochchi, has successfully encircled the Tigers and their leader who are virtually trapped in their bunkers. For the first time in years, the Sri Lankan government appears to be on the brink of a major success in its battle with terrorism. There is now the very real prospect of the capture of the elusive LTTE Chief, Velupillai Prabakaran, who is behind the assassination of a former Prime Minister of India, Rajiv Gandhi.”

“இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சியை நெருங்க இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருக்கிறது. இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் சுற்றி வளைப்பதில் வெற்றி பெற்றுவிட்டது. உண்மையில் அவர்கள் எல்லாம் பதுங்கு குழிக்குள் தள்ளப்பட்டு விட்டார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முதன்முறையாக இலங்கை அரசு பெரும் வெற்றி முனையை நோக்கிச் செல்வதாக தெரிகிறது. இது வரை தப்பித்துக் கொண்டிருந்த பிரபாகரன், இப்போது பிடிபடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த பிரபாகரன் தான் ராஜீவ் கொலையில் பின்னணியாக இருந்து செயல்பட்டார்.”

அக். 14 ஆம் தேதி கிளிநொச்சிக்கு, 2 கிலோ மீட்டர் அருகே ராணுவம் நெருங்கிவிட்டது என்று துள்ளிக் குதித்த மாலினி பார்த்த சாரதிகள், இது வரை கிளிநொச்சியை ஏன் பிடிக்கவில்லை என்பதை விளக்க முன் வரமாட்டார்கள்! ‘அவாளின்’ ஆழ் மன ஆசைகள் அவை!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இயக்கத்தை முன்னின்று நடத்தும் கட்சிகள் ம.தி.மு.க.வும், பா.ம.க.வும் தான் என்று மாலினி பார்த்தசாரதி, அக்கட்டுரையில் குற்றம் சாட்டுகிறார். (இதற்காகத்தான் ‘இந்து’ நாளேட்டை பெரியார் திராவிடர் கழகத்தினர் தீயிட்டுக் கொளுத்தினர். அதற்கு பெரியார் திராவிடர் கழகத்தை வன்முறை இயக்கம் என கண்டித்து ‘இந்து’ ராம் வெளியிட்ட காட்டமான அறிக்கையை, முழுமையாக வெளியிட்ட ஒரே நாளேடு பா.ம.க. நிறுவனர் நடத்தும், தமிழ் ஓசை’ தான் என்பதையும் வேதனையுடன் சுட்டிக் காட்ட வேண்டும்.)

மாலினி பார்த்தசாரதி மேலும் எழுதுகிறார்:

For the last decade or so, New Delhi has successfully resisted the various attempts made by the LTTE and its supporters in Tamil Nadu to force it to intervene in the Sri Lankan ethnic crisis. If New Delhi were to express its disapproval, even implicitly, of Sri Lanka’s sovereign right to recapture its own national territory from the LTTE, it would weaken the moral authority of India’s own actions in regard to its struggle against terrorism and the separatist agitation in Kashmir. This latest campaign in Tamil Nadu masterminded by a desperate LTTE must not be allowed to undermine the sound policy decision upheld by successive Indian governments since 1991 to stay out of Sri Lanka’s internal affairs.”

“இலங்கை இனப் பிரச்சினையில், கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை நிராகரிப்பதில் புதுடில்லி வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளிடமிருந்து, இலங்கை அரசு,தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளை மீட்பதற்கான உரிமை உண்டு. இது இலங்கை அரசின் இறையாண்மைக்கு உட்பட்ட உரிமை.

இந்த நடவடிக்கையில் இந்தியா, தனக்கு உடன்பாடு இல்லை என்பதை மறைமுகமாகக்கூட தெரிவிக்கக் கூடாது. அப்படி தெரிவித்தால் காஷ்மீரில் பிரிவினைக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அது தார்மிக ரீதியாக பலவீனப்படுத்திவிடும்.

தமிழ்நாட்டில் அண்மையில் தொடங்கியுள்ள இயக்கத்தின் பின்னணியில் இருப்பது விரக்தியடைந்த விடுதலைப்புலிகளின் மூளை; அவர்களே இதைத் தூண்டி விடுகிறார்கள். இந்த இயக்கத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே கூடாது. 1991 ஆம் ஆண்டு முதல் ‘இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதில்லை’ என்ற கொள்கையை இந்தியாவில் ஆட்சிக்கு வந்தவர்கள் வெற்றிகரமாக அமுல்படுத்தி வந்துள்ளனர். இந்த சிறப்பான கொள்கையை கைவிட்டுவிடவே கூடாது”

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகளைத் திணித்து, சொந்த மண்ணில் அகதிகளாக்கும் கொடுமையான சிங்களப் போரைக் கண்டு, பூரித்து, கூத்தாடி, ‘போரை நிறுத்தி விடாதே’ என்று எழுதுகிறது, ‘இந்து’ கூட்டம்.

கருநாடகத்திலிருந்து வெளிவரும் டெக்கான் ஹெரால்டு நாளேட்டில், அதன் செய்தியாளரான சென்னையில் இருக்கும் எஸ். முராரி எனும் பார்ப்பனர் இப்படி எழுதியுள்ளார்.

“தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டியுள்ள கூட்டம், சுற்றி வளைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுவிக்கும் செயல் திட்டத்துக்கான கூட்டமாகியுள்ளது. வடக்கில், புலிகளின் கடைசி கோட்டையான கிளிநொச்சியின் கதவைத் தட்டுவதற்கு, ராணுவம் நெருங்கிவிட்டது” - இப்படி குதூகலித்து எழுதும் பார்ப்பனர், இன்னும் மேலே போய் ஈழத்தில் நடப்பது இனப் படுகொலையே அல்ல என்று எழுதுகிறார், அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதையே கேலி செய்கிறார்.

“அங்கே நடக்கும் சம்பவங்களை அனைத்துக் கட்சிக் கூட்டம் இனப்படுகொலை என்று விவரிக்கிறது” என்று எழுதுகிறார். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த எழுச்சியை இந்த பார்ப்பனர் மன நோய் என்கிறார். அரைகுறைப் பார்வையோடு பார்க்கிறார்கள் என்றும் இலங்கையில் நடக்கும் எதார்த்தத்தை தெரியாதவர்கள் என்று திமிரோடு எழுதுகிறார். ஆக பார்ப்பனர்கள் –

• போரை நிறுத்தாதே என்கிறார்கள்.
• இலங்கை ராணுவம் வெற்றியை நோக்கி முன்னேறு கிறது என்று மகிழ்ச்சி கூத்தாடுகிறார்கள்.
• அங்கே நடப்பது இனப்படுகொலையே அல்ல என்கிறார்கள்.
• தமிழகத்தில் மூண்டுள்ள எழுச்சியை, மனநோய் என்கிறார்கள்.

பார்ப்பன முராரி - பார்ப்பன மாலினி பார்த்தசாரதிகள் இப்படி ஆரிய வெறியோடு நர்த்தனம் ஆடி, தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதை தமிழின உணர்வாளர்கள் அடையாளம் காண வேண்டும். பார்ப்பான் திருந்தி விட்டான் என்று பேசுகிறவர்கள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.