இந்தியாவில் பல்வேறு மாநிலங் களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு எல்லாம் இசுலாமியர்களே காரணம் என்று இதுவரை செய்யப்பட்டு வந்த பிரச்சாரம் - இப்போது சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது. ஆன்மீகம் என்றும் இந்துமதம் என்றும் கலாச் சாரம் என்றும் கூறி வந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அமைப்புகள், நாட்டில் வெடிகுண்டுகளை வைத்து, பல அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று குவிக்கத் திட்டமிட்டது வெளிச்சத் துக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மாலே கானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர் பாக இந்து பெண் துறவி பிரக்யா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பெண் பயங்கரவாதிதேயாடு குண்டு வெடிப்பில் தொடர்புடைய சிவ் நாராயண் சிங் கல்சாஸ்ரா மற்றும் சியாம் பாவாலால் என்ற இரு இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களின் கைதைத் தொடர்ந்து மராட்டிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு மேலும் 6 பேரைக் கைது செய்துள்ளது. இதில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள். இதில் ஒருவர் தற்போது பணியில் உள்ள ராணுவ அதிகாரி. பெயர் கஞ்சால் நீகார்த் புரோகித் எனும் பார்ப்பனர். மற்றொருவர் ஓய்வு பெற்றவர். பெயர் ரமேஷ் உபாத்யாயா எனும் பார்ப்பனர்.

குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப் பட்ட ‘மோட்டார் பைக்’ பெண் துறவி பிரக்யாவுக்கு சொந்தமானது. இவர்கள் மேலும், பல குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மூளையாக செயல் பட்ட ‘ராம்ஜி’ எனும் பயங்கரவாதியை போலீஸ் தீவிரமாக வலை வீசி தேடி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இசுலாமியர்கள் பகுதியில் குண்டுகள் வெடித்ததற்கு இசுலாமிய தீவிரவாதி களே காரணம் என்று இதுவரை காவல்துறை கூறி வந்தது உண்மையல்ல என்றும், இந்து பயங்கரவாத கும்பல் ஒன்று தொடர்ந்து இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டுக் கொண்டு, முஸ்லீம்கள் மீது பழி போட்டு வந்ததும் இப்போது அம்பலமாகியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட பெண் துறவி பிரக்யா, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்குடன் சேர்ந்து எடுத்த புகைப் படங்களை பத்திரிகைகள் வெளியிட் டுள்ளன. முதலில் குண்டுவெடிப்பை பா.ஜ.க. கண்டித்தாலும், பிறகு ஆர்எ.ஸ்.எஸ். முகாமிலிருந்து வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, பா.ஜ.க. தனது குரலை மாற்றிக் கொண்டு, பயங்கரவாதிகளை பாதுகாக்க முன் வந்துள்ளது. கட்சியின் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்டுள்ள அத்வானி, பிரதமர் மன் மோகன்சிங்குடன் தொலைபேசியில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசியிருப்பது பா.ஜ.க.வின் சுய ரூபத்தை அடையாளம் காட்டி விட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக அத்வானி கூறிய புகாரை மன்மோகன் சிங் மறுத்துள்ளார்.

பிரதமரின் பாது காப்பு ஆலோசகரான எம்.கே.நாரா யணன் அத்வானியை நேரில் சந்தித்து, காவல்துறை விசாரணை முறைகளை விளக்கியுள்ளார். விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தடை செய்யப் படுமா என்று, செய்தியாளர்கள் எம்.கே.நாராயணனைக் கேட்டபோது, அவர்கள் மீது பயங்கரவாத குற்றச் சாட்டுகள் ஏதுமில்லை. எனவே தடைசெய்யப்பட மாட்டாது என்று அரசியல்வாதியைப் போல பார்ப்பன உணர்வோடு சில நாட்களுக்கு முன் பதிலளித்தவர் தான் இந்த எம்.கே. நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரத்தில் கைது செய்யப்பட்ட 36 வயது பெண் துறவி பிரக்யாசிங், குண்டு வைத்த பயங்கரவாதியிடம் தொலை பேசியில் பேசும் போது, “ஏன், இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது? கூட்டமாக உள்ள பகுதியில் ஏன் குண்டு வைக்கவில்லை?” என்று கேட்டுள்ளார். இந்த உரையாடலை நீதிமன்றத்தில் புலன் விசாரணைத் துறை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளது.

இந்த பெண் துறவி, முதலில் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ‘ஏபிவிபி’யில் (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்), பின்னர் ‘துர்கா வாகினி’ என்றும், ‘விசுவ இந்து பரிஷத்’ பெண்கள் அமைப்பிலும் இருந்துள்ளார். மாணவராக இருந்தபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் சாகசங்களை செய்து வந்த இவர், 2006 இல் சன்னியாசி வேடம் தரித்து, பயங்கர வாதத்தில் ஈடுபாடு உள்ள இந்து சாமியார்களிடம் தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பை உருவாக்கிடும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ராணுவ அதிகாரியான சிறீகாந்த் பிரசாத் புரோகித் எனும் பார்ப்பனர் தான் குண்டுகளில் பயன்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த ‘ஆர்.டி.எக்ஸ்’ வெடி மருந்தை ராணுவ ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து திருடி வழங்கியுள்ளார். வெடி மருந்தைப் பெற்ற ராம்ஜி, குண்டு வெடிப்புக்கு திட்டங்களைத் தீட்டியிருக்கிறார். ராணுவமே, இந்து பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு இடமளித்துள்ளது. நாடு முழுதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

2006 ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டி ராவில் நந்திர் எனும் நகரில் ஒரு வீட்டில் வெடிகுண்டு செய்தபோது அது வெடித்து இரண்டு பேர் இறந் தனர். அப்படி வெடிகுண்டு தயாரிப் பில் ஈடுபட்ட இருவரும் முறையே பஜ்ரங்தள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள். அப் போதே காவல்துறை இந்தப் பிரச் சினையில் உரிய கவனம் செலுத்தி யிருக்குமானால், மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்காது.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் ‘தானே’ பகுதியில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளைச் சார்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில் - இந்துத்துவாவைப் பாதுகாக்க வேண்டும் என்ற போர்வையில் இந்து பண்டிகைகளின் போது வெறியூட்டும் பேச்சுகளைப் பேசி, இந்தப் பயங்க ரவாத அமைப்புகள் தங்களுக்கு வலிமையான ஆதரவு சக்திகளை உருவாக்கி வைத்துள்ளன என்கிறார். இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலோர், எந்த வேலையும் இல்லாதவர்கள். மதவெறியின் அடிப் படையில் மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள் என்கிறார், அந்த அதிகாரி.

அபிநவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பை இப்போது போலீசார் கண்காணித்து வருகிறார்கள். காந்தியார் கொலையில் மூளையாக செயல்பட்ட வி.டி.சவர்க்கார், 1904 ஆம் ஆண்டு தொடங்கிய அமைப்பு இது. அதே பெயரில் அமைப்பைத் தொடங்கி, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் ஹிமானி சவர்க்கார் என்பவர் - காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கும், காந்தி கொலையில் தொடர்புடைய வி.டி.சர்க்காருக்கும் நெருக்கமான உறவினர்.

மராட்டிய மாநிலத்தில் காந்தி கொலையை விமர்சித்து நடந்த ஒரு நாடகத்தில் குண்டு வீசியது இந்த அமைப்புதான் என்று கூறப்படுகிறது. இந்தப் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு கால்கோள் நடத்தியது மராட்டிய மாநிலம் தான். திலகர் தான் இதன் முன்னோடி. திலகர் வழியில் வந்த பார்ப்பன கோட்சே வாரிசுகள், மீண்டும் வெடிகுண்டுகளைத் தூக்கி யிருக்கிறார்கள். இந்திய ராணுவத்தின் பார்ப்பன அதிகாரிகளும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது, நாட்டை அதிரச் செய்துள்ளது. 

விடுதலைப் புலிகள் பற்றி வாய் கிழிய பேசும் சுப்ரமணிய சாமி, சோ, ஜெயலலிதா போன்ற பார்ப்பனர்கள், இந்த பார்ப்பன பயங்கரவாதம் பற்றி, மவுனம் சாதிப்பது குறிப்பிடத்தக்கது.

Pin It