மராட்டிய மாநிலம் நாசிக்கில் போனிஸ்லா என்ற தனியார் பள்ளியில் தான் வெடிகுண்டு வைப்பதற்கான பயிற்சிகளும், ராணுவ பயிற்சிகளும் பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு தரப்படுகிறது. இந்தப் பள்ளி 1936 இல் ஆர்.எஸ்.எஸ்.சை தொடங்கியவர்களில் ஒருவரான டாக்டர் பி.எஸ்.மூஞ்சே எனும் சித்பவன் பார்ப்பனரால் தொடங்கப்பட்டதாகும். ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரமும், ராணுவப் பயிற்சியும் இந்தப் பள்ளியில் தரப்படுகிறது.

ஆரம்பக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை மாணவர்கள் படிக்கிறார்கள். ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ராணுவப் பயிற்சி தருகிறார்கள். நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி சுவர்களில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.