புரட்டு வாதங்களுக்கு இயக்குனர் சீமான் பதிலடி!
அவரவர் செய்த பாவங்களுக்கு தண்டனை நரகத்தில் இருந்தது என்றால், நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு என்று, இயக்குநர் சீமான் கேட்டார். கடலுக்கு மேலே இருந்தால் தான் பாலம்; கடலுக்கு கீழே எப்படி ராமன் பாலம் போனது என்றும் கேள்வி எழுப்பினார்.
ஜூன் 15 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பங்கேற்று இயக்குனர் சீமான் ஆற்றிய உரை, சென்ற இதழின் தொடர்ச்சி:
கோயில் உண்டியல் காணோம் காவல் துறையே நடவடிக்கை எடுக்கனும்னா, கோயில் உண்டி யலையே காவல்துறை தான் காப்பாற்றுதுனா கடவுளைவிட காவல்துறைக்கு சக்தி அதிகம் இல்லையா. அவர்கள் காலில் விழுந்து கும்பிடு.
கேரளாவில் மீரா ஜாஸ்மின் என்ற கிருத்துவ பெண் இந்துக் கோவிலுக்குள் சென்றதால் சாமிக்கு தீட்டாயிடுச்சாம். அப்படியானால் கடவுளைவிட மீரா ஜாஸ்மின்னுக்கு சக்தி அதிகமா? அவர் காலில் விழுந்து கும்பிடுங்க (கைதட்டல்) என்ன பைத்தியக் காரத்தனம். அறிவு கெட்ட நிலை. காலங்காலமாக ஆண்டாண்டு காலமாக இந்த மக்களை சிந்திக்கிற திறனற்று அதே இடத்தில் நிற்க வைத்து வாக்கு பறித்து ஆளவும், வாழவும் பழகிக் கொண்ட பார்ப்பனர்களின் சதி.
இந்து மதம் என்கிறாயே? உன் மதத்தை தோற்று வித்தவன் யார்? இந்து மதம் என்கிற ஒரு மதத்தை உருவாக்கியவனே வெள்ளைக்கார கிருத்துவன் தானே? இல்லை என்று உன்னால் மறுக்க முடியுமா?
யார் இந்து? எவன் கிருத்துவன் இல்லையோ, யார் இஸ்லாமியன் இல்லையோ, யார் பார்சி இல்லையோ, யார் யூதன் இல்லையோ, அவன் இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டப்படி இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று வெள்ளைக்காரன் எழுதினான். நான் சொல்லவில்லை. இதற்கு முன்னால் இருந்த பெரியவா காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னார், வெள்ளைக்காரன் வந்தானோ இல்லையோ, நாம தப்பிச்சோம் என்றார்.
உன் மதம் என்ன நெறிப்படுத்தியது. நீங்க படம் போறீங்க, பக்தி படமா இருந்தா நம்ம பெண்களுக்கு சாமி வருதே. அதே திரையரங்கில் பால்கனியில் உட்கார்ந்து படம் பார்க்கும் பெண்களுக்கு சாமி வந்து, நீங்கள் பார்த்ததுண்டா? காரில் வந்திறங்கி படம் பார்க்கும் பெண்களுக்கு சாமி வந்து ஆடி பார்த்ததுண்டா?
ஒரு பாப்பாத்தி சாமி வந்து, பேய் பிடிச்சி ஆடி பார்த்ததுண்டா? கோயிலுக்கு வெளியே நிற்கும் உழைக்கும் பாட்டாளி வர்க்கம், இந்தத் தமிழன் தானே ஆடுகிறான், சாமி வந்தது என்று. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோயிலின் உள்ளே சிறிய மணியை ஆட்டுகிற ஒரு பார்ப்பானுக்கு சாமி வந்திருக்குதாடா இந்த நாட்டிலே? ஆட மாட்டான், ஏன் தெரியுமா? அவனுக்கு எங்கள் அய்யா பெரியாரை விட நல்லாவே தெரியும் கடவுள் இல்லை என்று. இல்லை என்றால் கோயில் வாசலில் வைத்து சங்கரராமனை கொலை செய்வார்களா? இல்லாத ராமனுக்கு கோயில் கட்டுவானாம்; இருக்கின்ற இராமனை தீர்த்துக் கட்டுவானாம். (கைதட்டல்) என்ன பைத்தியக்காரத்தனம். இதை நாங்கள் கேட்கக் கூடாது; பேசக் கூடாது என்றால் எப்படி? எம் மக்களுக்கு யார் சொல்லித் தருவார்கள்? இதை யார் உணர்த்துவார்கள்? எவ்வளவு காலமாக இதையே சொல்லிச் சொல்லி மடமையில் தள்ளுவீர்கள்?
இந்து மதம், இந்து என்று சொல்லுகிறான் என்றால் எதற்காக? வாக்கு சேகரிக்க. சாதிக் கட்சியாக இருந்தால் எந்த இடத்திலும் கட்டிய முன் பணம்கூட பெற மாட்டோம் என்பது தெரியும். அதனால் தான் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் இங்கே பயன்படுத்தி வருகிறான். எப்படி கிருத்துவனுக்கு பல நாடுகள் இருக்கு, இசுலாமியனுக்கு, பவுத்தனுக்கு பல நாடுகள் இருக்கு.
ஆனா, இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லை. யாரு இந்து இங்கே, தாழ்த்தப்பட்ட பள்ளன், பறையன் இந்துவா, ஏன் இந்த இந்து மதத்தை சாட வேண்டி இருக்கிறது. மக்களே, ஒரு தாழ்த்தப்பட்டவர், ஒரு கிருத்துவனாக மாறிவிட முடியும். ஒரு இசுலாமியனாக மாறிவிட முடியும். ஆனால், இவர்கள் பார்ப்பனாக மாறி விட முடியுமா? ஒரு போதும் இந்த நாட்டில் ஆக முடியாது. அப்படியானால் எது கொடுமை?
தீண்டாமையைப் பற்றி எல்லாம் பேசுவான். ராஜாவே! உன் முதுகில் இருக்கும் பூணூல் உன் தோட்டத்தில் விளைந்ததா? என் தோழன் தோட்டத்தில் விளைந்த பஞ்சாலே தானே பூணூல் செய்து போட்டிருக்கிறாய். அப்போது தீட்டு வரலையா? இந்த நாட்டில் எந்த பார்ப் பானாவது விவசாயம் செய்கிறான் என்று சொல்ல முடியுமா? உழைக்கிற எல்லா வேலையும் செய்து, செல்வங்களை செழிக்க வைப்பது எம்மினம் தானே?
கடவுள் என்கிறாய், இராமன், பிள்ளையார் என்கிறாயே! இராசாவே ஈசுவரன் யார்? ஈஸ்வரி யார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிறந்த பிள்ளையார் மட்டுமே எப்படி பார்ப்பான் ஆனான்? இதற்கு பதில் சொல்லுங்கடா.. பிள்ளையாருக்கு மட்டும் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி மட்டும் தெருவுக்கு இரண்டு பிள்ளையார் வைத்து கும்பிடுகிறீர்களே! அவனுடைய தம்பி முருகன், அவனும் இந்துக் கடவுள் தானே. அவனே திருத்தணியிலிருந்து வடக்கு நோக்கி ஒரு அங்குலம் நகர்த்துங்கடா பார்க்கலாம். என்ன கொடுமை!
இந்து, இந்து என்று சொல்கிறாயே, அந்த இந்து தானே தமிழ் ஈழமண்ணில் போராடுகிறான். அதற்கு குரல் கொடுத்து, அந்த விடுதலைக்கு போராடேன் பார்ப்போம். அந்த விடுதலைக்காக ஒருத்தனாவது பேசியிருக்கிறீர்களாடா? இந்த நாட்டிலே அது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? சிந்திக்க மாட்டீர்கள்.
ராஜா சொல்கிறான், பெரியார் சுதந்திர தினத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றிவிட்டாராம். அதனாலே அவர் தேச துரோகியாம். எதற்கு ஏற்றினார் கருப்புக் கொடி என்பது தெரியுமா? சுபாஷ் சந்திரபோஸ் கூட இந்த தேச விடுதலைக்காக இராணுவம் கட்டி போராடியவர். அவர் சொன்னார், சுதந்திரம் வாங்கினால் அதை மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு சொல்லாதீர்கள் என்று. அது என்ன குற்றமா? ஏன் சொன்னார்? அடிமைத்தனத்தில் இருந்த மக்களை அதே அடிமைத்தனத்தில் வைத்து கடுமையாக உழைக்கவைத்து வளத்தையும், செல்வத்தையும் பெருக்கிவிட்டு இந்த நாட்டில் சுதந்திரத்தை அறிவித்து கொடுங்கள் என்று சொன்னார் சுபாஷ் சந்திர போஸ்.
காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று நேருவிடம், காந்தி சொல்லுகிறார். ஆனால் நேரு ஒத்துக் கொள்ளவில்லை. தந்தை பெரியார், “ஒரு முழுமையான கல்வி அறிவு இல்லாமல், படிப்பறிவு தெளிந்து சிந்திக்கக் கூட திறனில்லாமல் இருக்கும் மக்களிடத்தில் ஒரு ஜனநாயகத்தை கொடுத்தால், அவனுக்கான சரியான தலைவனை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி விடுவான். தவறு செய்து விடுவான் என்று அச்சப்பட்டுத்தான் முதலில் கல்வியைக் கொடு, பிறகு சுதந்திரத்தைக் கொடு என்றார். அந்தக் கல்வியை மறுக்கும் வர்ணாஸ்ரமத்தைப் பாதுகாக்கும் பார்ப்பானின் கீழ் எங்கள் மக்கள் சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார்.
எங்கள் நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடு என்றார். அந்த பார்ப்பான் சுதந்திரத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றச் சொன்னார் எங்கள் அய்யா. கல்வி அறிவு இல்லாத சுதந்திரத்தை தந்ததால்தான் ராஜாவே நீயெல்லாம் மத்திய அமைச்சராப் போயிட்டே. என் அன்பு மக்களுக்கு வாக்களிக்க தெரியலையே. தனக்கான தலைவன் யாருன்னு தெரியலையே. மூக்குத்திக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும், 100 ரூபாய் காசுக்கும் வாக்களிக்கும் கீழ்த்தரமான சனநாயக நாட்டில் என்னடா சுதந்திரம் இருக்குது.
தமிழை காட்டுமிராண்டி மொழின்னு சொல்லிட்டாருன்னு, ராஜாவே சொன்னியே. உன் சங்கராச்சாரி, தமிழ் மொழியை நீச மொழி, தேவிடியா மொழின்னு சொன்னானே, அதைவிடவா கேவலமா எங்கள் அய்யா சொன்னார், ஏன் சொன்னார்? இந்த புராண புளுகுகளிலிருந்து இந்த மொழியை பிரிக்க முடியலியே என்ற வேதனையில் சொல்றார்.. அய்யா சொல்றார், ஒருவர் முழுமையான தமிழ் பற்றாளராய், தமிழை விரும்புவாரேயானால் நான் காலங்காலமாக அடிமையாய் இருப்பேன் என்று சொல்றார். ஏன் காட்டுமிராண்டி மொழின்னு சொல்றாரு. உங்க இராமாயணம், மகாபாரதம், பாஞ்சாலி சபதம் என்ற எழவு, கருமாதி, தேவாரம், திருவாசகம், இந்த புராண புளுகுகளை சுமந்த மொழியாக இந்த தமிழ் இருந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையில்தானே. மொழியின் மேலே, இந்த நாட்டு மக்கள் மீது பற்று இல்லாமலா தனித் தமிழ்நாடு கேட்டார்?
கூறு போட்ட சமஸ்கிருதம்
அவர் தாத்தா பாட்டி பூர்வீகக் குடி பிறந்த மண் கர்நாடகாவிலே இருக்கு. ஆனால் தனித் தமிழ்நாடு கேட்டு இந்திய தேசிய வரைப்படத்தை தமிழ்நாடு நீங்கலாக எரிக்கிறபோது அவர் தாயக மண்ணான கர்நாடகமும் வரைபடத்தில் சேர்ந்துதான் எரிந்தது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ராசாவே நீ யாரு,இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள்தானேடா நீங்கள்? இமயம் வரை பரவியிருந்த ஒரு தேசிய இனம் இன்றைக்கு மலையாளிகளாகவும், தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும் பிரிந்துப் போனதற்கு காரணமே பார்ப்பன ஆரிய மொழியான சமஸ்கிருதம் தான். தமிழ் மொழியோடு இந்த மொழியை கலந்து பேசியதின் விளைவு தான் இத்தனை மொழிகள், மறுக்க முடியுமா?
காரியம் என்ற சொல் இருக்கும் போது விசேஷம் என்ற சமஸ்கிருத சொல்லை நாம் பயன்படுத்து கிறோம். அவன் காரியத்தை கெட்டதுக்கு வைச்சான். மகிழ்ச்சி என்ற சொல் இருக்கும் போது சந்தோஷம் என்ற சொல்லை பயன்படுத்தினோம். கோயில் என்ற சொல் இருக்கும் போது ஆலயம் என்று பேசினோம். சோறு என்ற சொல் இருக்கும்போது சாதம் என்ற பேசினோம். மிளகு சாறு என்பதை ரசம் என்றோம். கருவி என்பதை ஆயுதம் என்றோம். இப்படி பேசிப் பேசியே ஏற்பட்ட மொழி திரிபில் கலப்பில்தான் இவ்வளவு பெரிய தமிழ் தேசிய இனம் சிக்குண்டு சிதறிப்போனது என்பது வரலாற்று உண்மை. சேர, சோழ, பாண்டியன் என்ற தமிழ் மூவேந்தர்கள். அதில் சேர மன்னன் மலையாளம் பேசிக் கொண்டு கேரளா போனான் என்பது நீங்கள் ஆய்வு செய்தால் தெரியும்.
இராமனுக்கு என்னடா சக்தி?
நாம் கட்டிய பாலம் எல்லாம் கடலுக்கு மேலே இருக்கிறது. இராமர் கட்டிய பாலம் மட்டும் ஏன் கடலுக்கு அடியிலே போகனும். கடவுளுக்கு சக்தியில்லாமல் போய் விட்டதா? இராமன் எதற்காக பாலம் கட்டினான்? இலங்கைக்கு செல்வதற்கு எதற்காக? இராவணன் இராமன் பெண்டாட்டியை தூக்கிக் கொண்டு போய்விட்டானாம். நாமே அரை மணி நேரம் மனைவியைக் காணவில்லை என்றால் இங்கும் அங்கும் தேடுவோம்; காவல் நிலையத்திற்கு செல்வோம். ஆனால் இராமன் பொறுமையாக குரங்குகளை, அணில்களை கொண்டு பாலம் கட்டிக்கிட்டிருந்திருக்கிறான். அணில் கல் எடுத்துக் கொடுத்ததாம். அணில் கல் எடுத்துக் கொடுத்துத்தான் பாலம் கட்டனும்னா இராமனுக்கு என்னடா சக்தி இருக்கிறது? இராமர் செல்லமாக அணிலை வருடிவிட்டாராம், மூன்று கோடு விழுந்ததாம்.
இந்தியாவிலுள்ள அணிலுக்கு இராமர் கோடுபோட்டார். ஆஸ்திரேலியாவிலுள்ள அணிலுக்கும் கோடு இருக்கிறதே, அதற்கு யார் போட்டது? இராமர் விரல்பட்ட இடம் எல்லாம் கோடா இருந்தால், சீதை வரிக் குதிரையாக அல்லவா இருக்க வேண்டும். (கைதட்டல்) இதையெல்லாம் சிந்தித்துப் பேசினால், இந்துக் கடவுள்களை மட்டுமே பேசகிறார்கள் என்பதா? இவையெல்லாம் கடவுளா? 60 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டி, 6 ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாரு தசரதன். ஒரு பெண்டாட்டிக் கட்டி வாழ்பவனுக்கே இல்லாத பொல்லாத நோய்களெல்லாம் வருகின்றது. 60 ஆயிரம் பெண்டாட்டிகளோடு வாழ்ந்திருந்தா, எயிட்ஸ் வந்தில்ல செத்திருக்கணும். இதை சொன்னா என்ன தப்பிருக்கு.
தொடர்ச்சி....