சென்னையில் கோடம்பாக்கத்தில் மீனாட்சி கல்லூரி என்ற முழுமையான பார்ப்பன நிர்வாகத்தில், ஒரு கல்லூரி நடந்து வருகிறது. கலைக் கல்லூரி வளாகத்திலேயே பொறியியல் கல்லூரியையும் நடத்திக் கொண்டு, அனைத்து நிறுனங்களுக்கும் ஒரே பரிசோதனைக் கூடத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இக்கல்வி நிறுவனத்தின் முக்கியப் புள்ளி ஆவார். கல்லூரியின் முதல்வராக இருப்பவர் லட்சுமி என்ற சாதி வெறிப் பிடித்த பார்ப்பனர். இந்தப் பார்ப்பன கல்லூரி நிர்வாகத்தில் பார்ப்பனரல்லாத மாணவிகள் தொடர்ந்து அவமதிப்புக்கும், பழி வாங்கலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அண்மையில், இக்கல்லூரியில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்த ரேகா என்ற மாணவி, தனது சொந்த ஊரான மீஞ்சூரைச் சார்ந்த நந்தகோபால் என்ற பொறியியல் பட்டதாரி மாணவனை காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டார். மணமகன் தாழ்த்தப்பட்டவர். மணப்பெண் உயர் சாதி. திருமணம் முடிந்து சில வாரம் கழித்து, ரேகா கல்லூரிக்குச் சென்றபோது கல்லூரி பார்ப்பன முதல்வர், கல்லூரியில் அம் மாணவியை சேர்க்க மறுத்துவிட்டார்.

அதோடு, பெண்ணின் கணவரை, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, கீழ்சாதிக்காரனை திருமணம் செய்து கொண்டவளுக்கு இங்கே இடமில்லை என்று திமிரோடு கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண், கல்லூரி முதல்வர் மீது கோடம்பாக்கம் காவல்துறையில் புகார் செய்துள்ளார். விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பார்ப்பன முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி மூடி மறைத்துவிடக் கூடாது என்று பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

Pin It