பா.ஜ.க. துணைத் தலைவர் பார்ப்பான் எம். ராஜாவின் நரகல் நடைப் பேச்சு தமிழகம் முழுதும் தோழர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. ஒரு தோழர் எழுதியனுப்பிய மறுப்பு இது.

• தந்தை பெரியார் ‘பேசிக்’ அறிவே இல்லாதவராம்! மானங்கெட்டவராம். வெள்ளைக்காரனின் கைக்கூலியாம். அட, மானங்கெட்ட ராஜாவே வெள்ளைக்காரனுக்கு இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்ததே ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஏழு பார்ப்பான்கள் தான் வெள்ளையனை வீட்டினுள் சாப்பிட விட்டான். ஆனால் மகாத்மா என்று சொல்லப்பட்ட காந்தியையே திண்ணையில் உட்கார வைத்து சாப்பாடு போட்டான், மயிலைப் பார்ப்பான் சீனிவாச்சாரி. யார் கைக் கூலி?

• தி.க., தி.மு.க.காரனுங்களை தெருவிலே நடமாட விட்டால் பெண்களின் மானத்திற்கு ஆபத்தாம். இதோ பார், உன்னைப் போன்ற ஒரு பார்ப்பான் தஞ்சை ஊத்துக்கோட்டைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற பார்ப்பான் 1847 இல் எழுதுகிறான்...

“தாயே யசோதா உந்தன், ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும்
ஜாலத்தைக் கேளடி தாயே!”
“பாலனென்று தாவியணைத்தேன்
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டான்
பாலனல்லடி உன் மகன் ஜாலமாக செய்ததெல்லாம்
நாலுபேர்கள் கேட்கச் சொன்னால் நாணமிக ஆகுதடி... தாயே”

இதோ சுப்பிரமணி பாரதி எழுதுகிறான்...

“தீராத விளையாட்டுப் பிள்ளை... கண்ணனால்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை!”

ஏன் உங்கள் கண்ணன் ஆண்பிள்ளைகளோடு விளையாட மாட்டானா? ஒரு ஆண்டாள் என்கிற பார்ப்பனத்தி திருப்பாவையில் எழுதுகிறாள்...

“கற்று கறவை கணங்கள் பல கறந்து....
புற்றரவு அல்குல் புனமயிலே! போதாராய்....”

இதற்கு என்ன பொருள்? புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்று பெண் குறியை உடையவளே... ஒரு பெண்ணைப் புகழ வேறு எதுவும் கிடைக்கவில்லையா?

• ஆயுதத்தையெல்லாம் கடவுள்கிட்ட கொடுத்திட்டு நாசமாப் போயிட்டாங்களாம்! ராஜா கண்ணீர் வடிக்கிறான்! ஏன் உங்க சாமிகிட்ட திரும்பக் கேட்டால் தந்து உதவாதா? ஆயுதங்களுடன் வீரமாக உலாவரும் சாமிகள் திருடப்படாமல் எத்தனை இருக்கு? பூட்டை உடைத்து திருடப்பட்டு வெளிநாட்டில் மாட்டுக்கறி திங்கறவனிடம் எத்தனை இருக்கு? கணக்குத் தெரியுமா உனக்கு? இங்கு பஞ்சாமிர்தம் சாப்பிடும் கடவுளர்கள் வெளிநாட்டில் மாட்டுக்கறி திங்குமா? இல்லை வராகக் கறி (பன்றிக் கறி) திங்குமா? காணாமல் போன சக்தியுள்ள கடவுளைக் கண்டு பிடிக்கிறதே மலம் தின்னும் நாய்கள் தான். உங்க சாமியோட யோக்யதை இந்த நிலைமையிலே இருக்கு இந்த நிலையிலே ஆயுதம் ஒரு கேடா?

• இந்த நாட்டிலே எந்த மதத்தையும் புண்படுத்தக் கூடாதுன்னு சட்டத்திலே இருக்காம்! காவல்துறை எப்படி அனுமதி கொடுத்ததுன்னு ஆவேசப்படுறியே? 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதியை இடித்தீர்களே! முஸ்லீம்களை மகிழ்விக்கவா? அல்லது புண்படுத்தவா? மதம் என்பது மக்களுக்காகத்தானே - உனது இந்து மதம் எங்களை சூத்திரன் (தேவடியாள் மகன்) என்று சொல்லும் போது ‘சூத்திர’ இந்துக்களான எங்கள் மனம் புண்படாதா?

கலைஞரின் கருவிலே குற்றம் என்கிறாயே? வருணாசிரம தர்மப்படி நீ பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன். நீ ஜட்டியை நெற்றியில் போட்டிருக்கியா? அல்லது வைசியன் போடும் தொடையில் போட்டிருக்கியா? நீ வைசியனா? இல்லை பார்ப்பானா? யார் கருவிலே குற்றம்?