1984 இல் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டபோது டெல்லியில் 3000க்கும் அதிகமான அப்பாவி சீக்கியர்கள் திட்டமிட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரித்த நானாவதி ஆணையத்தின் பரிந்துரை, மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர், எம்.பி. ராஜன்குமார், மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஜெகதீஷ் டைட்லர் குற்றச்சாட்டை மறுக்கிறார். அவரது மறுப்பு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் 3000 அப்பாவி சீக்கியர்கள் படுகொலை என்பது மன்னிக்க முடியாத கொடுமை! இந்தப் படுகொலைகளுக்கு உள்ளான சீக்கிய மக்களின் உள்ளத்தில் பதிந்துள்ள காயம் போக்கப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும்; அரசு மூடி மழுப்பி விடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது! கூடவே கூடாது!