• விமானத்தைக் கண்டுபிடித்தது வேதகால முனிவர் என்கிறார் உ.பி ஆளுநர். பார்ப்பனர்கள் கடல் தாண்டிப் போவது பாவம் என்கிற ஒரே காரணத்தால் தான் அதை ரகசியமாக மனசுக்குள் பூட்டி வைத்திருந்தார் அப்படித்தானே மேடம்?
• முதலமைச்சரின் குடும்பத்தை இழிவாகப் பேசினாலும் கஸ்தூரியின் குடும்பத்தைக் கருதி ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் குடும்பம் அறிக்கை வெளியிடுகிறது. இதுதான் சனாதனம்!
• தமிழ்நாட்டின் ஒரே திராவிட அரசியல் கட்சி தி.மு.க மட்டுமே. அதனால்தான் தமிழ்நாடு முதல்வர் நீதிக்கட்சி தொடக்க நாளுக்கு வாழ்த்துக் கூறுகிறார். எடப்பாடியைக் கேட்டால் இவையெல்லாம் அறிஞர்கள் விவாதிக்கும் பிரச்சினை என்று கூறி விடுவார்.
• சங்கி என்று என்னைச் சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சீறிய சீமான், இன்று சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம் கூறுகிறார். செருப்பும் நட்பும் இணைகிறது... இதுதான் மண்டியிடாத மானம். புரிந்து கொள் என் தமிழ்ச் சொந்தங்களே.!
• திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது என்று கொதிக்கும் எடப்பாடியார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசாக முதல்வர் பதவியேற்ற ஜானகி அம்மையாருக்கு நூற்றாண்டு விழா எடுத்து குடும்ப வாரிசுக்கு புகழ்மாலை சூட்டுகிறார்.
• இசைவாணி, ரஞ்சித் பக்கம் உறுதியாக நிற்போம்! இசைவாணியின் குரல் பெண்களின் உரிமைக்குரல். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை விட மறுக்கும் சட்டவிரோதிகள் மீது குற்றச் சட்டங்கள் பாய வேண்டும். இசைவாணியின் பாடலை தமிழ்நாடு முழுதும் பாடுவோம்.
- விடுதலை இராசேந்திரன்