6 வயதிலிருந்து 16 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டம் வந்துவிட்டது. ஆனால், சட்டத்தை அமுல்படுத்த கல்விக்கான கட்ட மைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து, ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ‘மனுதர்ம’ப் பார்வைதான் நீடிக்கிறது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்தியாவில் அனைத் துப் பள்ளிகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பொது நலவழக்கு ஒன்றில் உத்தர விட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப தயங்குவதற்குக் காரணம், கழிப்பறை வசதிகள் செய்யப்படாமைதான். அதிலும் குறிப்பாக பெண் குழந்தை களை பெற்றோர்கள் இந்தக் காரணத் துக்காக பள்ளிக்கு அனுப்ப தயங்கு கிறார்கள் என்று ஆய்வுகளை சுட்டிக் காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் வரக்கூடிய பள்ளிகளில் கழிப்பறை வசதி கொண்ட பள்ளிகள் 44 சதவீதம் மட்டுமே! இந்தியாவில் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 49.65 கோடி. இதில் 11-லிருந்து 18 வயதுக்குட்பட்ட பெண்கள் 17 சதவீதம். இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்த பெண்கள் 53-87 சதவீதம் மட்டுமே. 11 வயதிலிருந்து 14 வயது வரை பள்ளிக்குப் போகாத பெண் குழந்தைகள் 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி 5.9 சதவீதம். இந்து பார்ப்பனிய சமூக அமைப்பு உறுதி யுடன் காலூன்றி நிற்கும் ராஜஸ்தான், உ.பி., சட்டீஸ்கர் போன்ற மாநிலங் களில் பெண் குழந்தைகளின் கல்வி, மிக மிக மோசமாக உள்ளது.

சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வியை மறுத்தது மனு சாஸ்திரம். 65 ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு பழு தடைந்த கோயில்களை புதுப்பிக்க வும், ‘கும்பாபிஷேகம்’ செய்யவும் துடிக்கும் ‘மனுதர்ம’ ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடங்களுக்கு கழிப்பறை களைக்கூட நிறுவுவதில்கூட ஆர்வம் காட்டவில்லை. 56 சதவீதப் பள்ளிகள் இந்தியாவில் கழிப்பறை வசதிகள் இல்லாமலே இருக்கின்றன என்ற அவமானம், உலகில் இந்த ‘பார்ப்பன’ தேசத்தைவிட வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா?

Pin It