கேரள அரசின் சட்டவிரோதமான நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய நடுவண் அரசு, ஏதோ, ஒரு வேறு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப்போல எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று நிற்கிறது. கேரளாவின் சண்டித்தனத்துக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் அந்த உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றாலும் -இந்தப் பிரச்சினையில் முதன்மையான எதிரி - இந்திய தேசிய ஆட்சி தான்!

முல்லைப் பெரியாறு அணை மீண்டும் எரியத் தொடங்கி யுள்ளது. கேரள அரசின் சண்டித்தனம் தமிழர்களை கொதித்தெழ வைத்துள்ளது.

• 1981லிருந்து 1994 வரை 3 முறை அணை பலப்படுத்தப்பட்ட பிறகும் -

• உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு ஓராண்டு ஆய்வு

நடத்தி அணை உறுதியாக உள்ளது என்று அறிவித்தப்

பிறகும் -

• கேரள அரசின் வழக்கறிஞர் தண்டபாணியே நீதிமன்றத்தில் அணையின் உறுதியை ஒப்புக் கொண்டப் பிறகும் -

கேரள அரசு - அணை உடையப் போவதாக பீதி கிளப்பி, கேரள மக்களை உசுப்பிவிட்டதோடு, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை காலில் போட்டு மிதித்து, அணையில் 120 அடி தண்ணீரை மட்டுமே தேக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி விட்டது.

கேரள அரசின் சட்டவிரோதமான நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய நடுவண் அரசு, ஏதோ, ஒரு வேறு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப்போல எந்தக் கருத்தும் தெரி விக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று நிற்கிறது.கேரளாவின் சண்டித்தனத்துக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் அந்த உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றாலும் -இந்தப் பிரச்சினையில் முதன்மையான எதிரி - இந்திய தேசிய ஆட்சி தான்!

இந்தியாவை அன்னிய சக்திகளிடமிருந்து காப்பாற்ற பல லட்சக் கோடி ரூபாயில் ராணுவ பலத்தை பலப்படுத்தி வரும் இந்திய அரசு -தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்கியுள்ள மாநிலங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை - மோதலை முடிவுக்குக் கொண்டு வராமல் - நீதியை சட்டத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யாமல் செயலற்றுப்போய் நின்று வேடிக்கை பார்ப்பது ஏன்? இந்தியாவை ஒட்டு மொத்தமாகக் கட்டியாளும் திறனை செயலை இந்தியா இழந்து விட்டது என்பது தானே உண்மை!

செயலற்ற - நீதி வழங்காத - நியாயமான - சட்டபூர்வமான உரிமைகளைப் பெற்றுத்தரவியலாத இந்திய ஆட்சி - என்ற அமைப்பு தேவையா என்பதே இப்போது அர்த்தமுள்ள கேள்வியாகும். ஒன்றுபட்ட இந்தியா - தோல்வி அடைந்துவிட்டது. இந்தியா வில் வாழும் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தீர்வு கிடைக்காது என்ற நிலையில் - தமிழர்களின் பிரதான எதிரியாக நிற்பது - பார்ப்பன - பன்னாட்டு சுரண்டலுக்காக மட்டும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்திய ஆட்சி தான். எனவே - தமிழர்கள் எதிர்ப்பு ‘இந்தியா’ என்ற பார்ப்பன பனியா வல்லாதிக்கத்தை நோக்கியே திருப்ப வேண்டும்.

இந்திய அரசே; முல்லைப் பெரியாறு பிரச்சினையில் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? பாராமுகம் காட்டும் இந்தியாவிடம் - தமிழர்கள் தங்கள் இறையாண்மையை எப்படி இனியும் ஒப்படைக்க முடியும்? தேசபக்த திலகங்களே!ஒருமைப்பாடு விசுவாசிகளே! அடக்குமுறை சட்டங்களை அவிழ்த்து விடுவோரே!தமிழர்களின் நியாயமான இந்த கேள்விக்கு என்ன பதில்?