சென்னை மற்றும் உடுமலையிலிருந்து வேலூர் நோக்கி...
மரண தண்டனைக்கு எதிராக 13 நாட்கள்; 90 ஊர்களில்... கழகப் பரப்புரைப் பயணம் புறப்படுகிறது

சென்னையில் தொடக்கக் கூட்டம்

பரப்புரைப் பயணத்தின் தொடக்கப் பொதுக் கூட்டம் சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் செங்கொடி நினைவு அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடக்கிறது. வைகோ, வழக்கறிஞர் துரைசாமி, துரை. இரவிக் குமார் (விடுதலைச் சிறுத்தைகள்), பேராசிரியர் தீரன் (நாம் தமிழர் கட்சி), கி. வேல் முருகன் (பா.ம.க.), வழக்கறிஞர் பாண்டிமாதேவி, கீற்று இரமேசு உரையாற்றுகிறார்கள். இரா. உமாபதி நன்றி கூறுகிறார்.

பெரியார் திராவிடர் கழகம் மரண தண்டனை ஒழிப்புப் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையிலிருந்து ஒரு அணியும், செப். 28 ஆம் தேதி உடுமலைப் பேட்டையிலிருந்து ஒரு அணியும் புறப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் மரண தண்டனை எதிர்ப்பை விளக்கும் கலை நிகழ்ச்சிகளும், பரப்புரை கூட்டங்களும் நடைபெறுகின்றன.

செப்டம்பர் 20 - சென்னையிலிருந்து தொடங்கும் பயணக்குழு, 21 ஆம் தேதி மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செங்கல் பட்டு, காஞ்சிபுரத்திலும்;

செப். 22  - வந்தவாசி, செஞ்சி, திண்டி வனம், விழுப்புரத்திலும்;
செப். 23  - வில்லியனூர், புதுச்சேரியிலும்;
செப். 24  - கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறையிலும்;
செப். 25  - திருவிடைமருதூர், கும்ப கோணம், தஞ்சாவூர், திருச்சியிலும்;
செப். 26  - விராலிமலை, கொட்டாம்பட்டி, மேலூர், மதுரையிலும்;
செப். 27 - காரியாபட்டி, அருப்புக் கோட்டை, பந்தல்குடி, தூத்துக்குடியிலும்;
செப். 28 - திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, விருதுநகரிலும்;
செப். 29 - திருமங்கலம், சோழவந்தான், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்லிலும்;
செப். 30 - செம்பட்டி வேடசந்தூர், ஒட்டன் சத்திரம், பழனியிலும்
அக். 1 - கீரனூர், மூலனூh, சின்ன தாராபுரம், கரூரிலும்
அக். 2 - வேலாயுதம்பாளையம், ப.வேலூர், நாமக்கல், சேலத்திலும்;
அக். 3 - அரூர், ஜோலார்பேட்டையிலும் பரப்புரை செய்து வேலூரில் நிறைவடைகிறது.

13 நாட்களில் 50 ஊர்களில் பரப்புரை நடக் கிறது. சென்னையில் 20 ஆம் தேதி பயணத் தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இரண்டாவது அணி

இரண்டாவது பரப்புரைக் குழு செப். 28 ஆம் தேதி உடுமலைப் பேட்டையிலிருந்து பயணத்தைத் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு வரை பயணம் தொடருகிறது.

செப். 28 - உடுமலை, மடத்துக்குளம், காரத் தொழுவு, கணியூர், தாராபுரம், குண்டடம், திருப்பூரிலும்;
செப். 29 - பல்லடம், சுல்தான்பேட்டை,
நெகமம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவையிலும்;
செப். 30 - கவுண்டன்பாளையம், துடிய லூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப் பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சத்யமங்கலம், கோபி, ஈரோட்டிலும்;
அக். 1 - குமாரபாளையம், பவானி, சித்தூர், அம்மாபேட்டை, மேட்டூர் நகரம், மேட்டூர் ஆர்.எஸ்.சிலும்
அக். 2 - குஞ்சாண்டியூர், நங்கவள்ளி, மேச்சேரி, வெள்ளார், தோப்பூர், தர்மபுரி, பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூரிலும்;
அக். 3 - கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூரில் - பரப்புரைகளை நடத்தி, வேலூரில் நிறைவடைகிறது.

6 நாட்கள் 41 ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடக்கின்றன. பயணத்தில் கழகத் தலைவர் கொளத்தூர்  மணி, பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகப் பேச்சாளர்கள், தோழமை அமைப்பினர், கலைக்குழுவினர் பங்கேற்கிறார்கள்.

Pin It