சென்னையில், மார்ச் 20 ஆம் தேதி பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

பாபா ராம் தேவ் என்ற இந்து மதவெறி யாளர் ‘பாரத் ஸ்வாபிமான் யாத்ரா’ என்ற பெயரில் யோகாப் பயிற்சி என்ற போர்வை யில் நாடு முழுதும் சுற்றுப் பயணம்செய்து ‘பசுவதை’ செய்வோருக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கை விசாரித்து 3 மாதத்துக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் பேசி வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து உணவு மாட்டுக்கறி. இதில் ‘பசுவை கொல்வது பாவம்’ என்ற பார்ப்பன சிந்தனையைப் புகுத்தி, மாட்டிறைச்சி உண்ணும் ஏழை எளிய மக்களை ‘தூய்மை யற்றவர்கள்’ என்று இழிவுபடுத்துவதோடு மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகை உணர்வுகளைத் தூண்டி வரு கிறார். இந்த ராம் தேவ் பாபா நிகழ்ச்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், மாட்டுக்கறி உணவை மத அரசிய லாக்கும் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி, பெரியார் திராவிடர் கழகம் இயக்கம் நடத்து வது என்றும் செயற்குழு தீர்மானித்தது