பார்வையாளர்களும், போட்டியாளர்களும் இல்லாத மைதானத்தில் தனியாக ஆட்டம் போடவேண்டியவர், அடிக்கடி பர்னிச்சர் மேளா நடத்தி தமிழ்நாட்டில் பெயர்பெற்ற கட்சிக்கு சொந்தக்காரரான இவருக்கு எங்கிருந்து வந்தது? இந்த வீரம்! இந்த வார்த்தைக்கும் இவர்களின் பரம்பரைக்கும் சம்பந்தமில்லாத செயலாயிற்றே எப்படி இவரால் இவ்வாறு பேச முடிந்தது. ஓ மறந்துவிட்டேன் மன்னிப்பு கடிதம் எழுதி சாதனை படைத்த ஆட்களுக்கு பெயர் வீரசவர்க்கர் இனத்தைச் சேர்ந்தவராயிற்றே! இவரின் செயல் இப்படித்தான் இருக்கும்.

ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் கட்சிகளின் செயல்பாடுகளும் மாறும் அதனால் நமக்கு எதாவது எசகுபிசகா ஆகிவிடப்போகிறது என்ற பயமில்லாமல் என்னது இது சின்னபிள்ளத்தனமா?

ஓ எதைப்பற்றிப் பேசுகிறேன் என்று தெரியவில்லையா? அதான்பா!

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 286-இல்  232 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற முன்னாள் இயக்குநர் பி.மணியிடம், வெறும் 52 வாக்குகள் பெற்று  இமாலய தோல்வி அடைந்த எச்.ராஜா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், கடந்த 15.09.2018 அன்று தடையை மீறி நடந்த கலவர(வி)நாயகன்  ஊர்வலத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசினார்.

அந்த வீடியோவில், உயர்நீதிமன்றத்தால் மேடையமைத்துப் பேச தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் மேடை போட்டு பேசுவேன் என அடம்பிடிக்கிறார் எச் ராஜா.

தடுத்து சமாதானப்படுத்த கூனிக்குறுகி வரிக்கு வரி அண்ணாச்சி என கெஞ்சிக் கேட்கும் போலீசு அதிகாரிகளை  நாயை விட இழிவாக நடத்துகிறார் எச்.ராஜா. நொடிக்கு நொடி போலீசு அதிகாரிகளின் முகத்துக்கு நேரே கையை நீட்டி, “Police is Corrupt” எனக் கத்துகிறார். அந்த போலீசு அதிகாரியோ மானத்தை வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டு வந்திருப்பார் போல. எச்.ராஜாவின் அழிச்சாட்டியத்துக்கு சமாதானம் கூற மீண்டும் முயல்கிறார். “அண்ணாச்சி, ஹை கோர்ட் ஆர்டர் அண்ணாச்சி” என காலில் விழாத குறையாகக் கெஞ்சுகிறார்.

அதற்கு எச்.ராஜாவோ பார்ப்பனக் கொழுப்போடு “ஹை கோர்ட்டாவது மயிராவது!” எனத்துடிக்கிறார். நீதிபதிகளுக்கும் மானம் இல்லை என நினைத்தார்களோ என்னவோ அந்த போலீசு அதிகாரிகள் மீண்டும் எச். ராஜாவிடம் கெஞ்சத் தொடங்கினர்.

இன்னும் ஒரு படி மேலே ஏறிப் பேசினார் எச்.ராஜா. “வெட்கமா இல்லையா? டிஜிபி வீட்டில ரைடு நடக்கிறது. அன்னைக்கே நீங்கள்லாம் யூனிஃபார்மைக் கழட்டிப் போட்டுட்டு வீட்டுக்கு போயிருக்கணும். ‘’லஞ்சம்  வாங்குறீங்களேயா லஞ்சம் கிறுஸ்தவன்ட்ட முசுலீம்கிட்ட வாங்குறதயெல்லாம் சேத்து நான் தர்றேன்யா லஞ்சம்.”எனக் கதறிக் கொண்டே தனது அடிபொடிகளுக்கு அங்கு மேடை போட உத்தரவிடுகிறார்.

எட்டுவழிச்சாலை போராட்டம்,  கருத்து சொன்னவர்களை தேடித்தேடி கைது செய்வது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடியவர்களில் 13 பேர்களைக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற செயல்களை செய்த காவல்துறை இங்கே ராஜா முன் பயந்து நடுங்குகிறது. நீங்கள் இப்படி பேசலாமா என்று கெஞ்சுகிறது. அவர் என்ன பெரிய புடுங்கியா என்று ஒரு போலீசுக்காரர் கூட கேட்கவில்லை.

ஆனால் இதுவே வேறு ஒரு நபராக இருந்திருந்தால் கன்னத்திலே நாலு அறைவிட்டு சட்டை காலரைப்பிடித்து ரோட்டில் அடிபட்ட நாயை இழுத்துக் கொண்டுப்போய் ஏதோ ஒரு இடத்தில் வீசுவதைப்போல போலீஸ் வண்டியில் வீசியிருப்பார்கள் நமது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய காவல்துறை அதிகாரிகள். ‘’என்னாயிற்று இவர்களுக்கு? ‘’சாராயக்கடை வேண்டாமென்று போராடிய பெண்களை பட்டப்பகலில் ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ள இடமென்றும் பாராமல் ஒரு பெண்ணை கன்னத்தில் அடித்த வீரம் படைத்த நமது காவல்துறையினர்,  ‘’நடிகரும், சமுதாய நலனில் அக்கறைக் கொண்டவருமான திரு.மன்சூரலிகான், மாணவிகளும், சமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கு காரணமானவர்கள், ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள்தான் என அறிந்து துணிச்சலாக அவர்களுக்கு எதிராகப் போராடும் போர்க்குணம் படைத்த போராளிகளான வளர்மதி, நந்தினி மற்றும் அவரது சகோதரி மற்றும் தந்தையார், இந்திய, தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு தற்போதைக்கு பெரும் தலைவலியாக, தமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையுள்ள, சமுதாயத்தின்மீதும், மனித சமூகத்தின்மீதும் பெரும் பற்று கொண்ட தோழர் திரு. திருமுருகன் காந்தி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினரானாலும் பரவாயில்லை என திரு. கருணாஸ் அவர்கள். இன்னும் பலரை கைது செய்ய, காட்டிய ஆர்வமெல்லாம் இரண்டு சிரிப்பு நடிகர்களை (ஒருவர் சினிமாவில், இன்னொருவர் நிஜத்தில்) கைது செய்ய காவல்துறை ஆர்வம் காட்டவில்லையே! ஏன்? வயதானவர்கள் என்றுக்கூட பார்க்காமல் கைது செய்து இழுத்துச்செல்லும் காவல்துறை, இவர்கள் போடும் ஆட்டத்திற்கு இவர்களின் வாலை ஒட்ட நறுக்கியிருக்குமே அதைவிடுத்து ஏன் இவர்களிடம் அமைதியாக நிற்கிறது?    

ஆளும் மத்திய அரசின் பர்னிச்சர் மேளா கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் கைது செய்யக் கூடாது என நினைக்கிறதோ? இல்லையே! தமிழகத்தில் நடிகர் பவர்ஸ்டார் திரு.சீனிவாசனுக்கு கூடும் கூட்டம் கூட எச்.ராஜாவுக்கு கூடுவதில்லையே இவரின் செல்வாக்கு என்பது தமிழ்நாட்டில் இவர் ஒரு செல்லாக்காசு என்பது காவல்துறை நன்கு அறியுமே! பிறகு எப்படி போலீஸ் பயப்படுகிறது.

முக்கியத் தலைவர்களும், சமூகவலைத்தளங்களிலும் கடும் கண்டனம் எழுந்த பிறகே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் திருமயம் போலீசார் எச்.ராஜா மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அவரை கைது செய்ய திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப் பட்டிருந்தாலும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. கைது செய்யவும் மாட்டார்கள்! இதெல்லாம் வெறும் வேசம்.

மேலும் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆ... ஊ... என்றால் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்துவிட்டார்கள் என்று கொதித்தெழும் நீதியரசர்களும் இந்த விவகாரத்தை தாமாகவே கையில் எடுத்து நீதிமன்ற வழக்கு தொடுக்குமாறு உத்திரவிடவில்லை. என்ன இருந்தாலும் ராஜா ‘தேசிய பர்னிச்சர் மேளா கட்சியின் செயலாளர்’ அல்லவா?

இதுகுறித்து எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்ததோடு எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகத் தொடர்ந்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்கத் தயார் என்றும், தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். அவர்களுக்கும் ஏதோ பயம் உள்ளுக்குள்ள இருக்கும் போல தெரிகிறது.

பிரச்சினை பெரிதான பிறகு அந்த வீடியோவில் பேசியது என் குரல் அல்ல என்று ‘அட்மின்’ புகழ் எச்.ராஜா பல்டி அடித்துள்ளார். ஏன் திடீரென இந்த பல்டி? தூத்துக்குடியில் போராடிய அப்பாவிகளை வாயிலே சுட்ட காவல்துறை! ‘’நாம் வேறு அவர்களை  “வெட்கமா இல்லையா டிஜிபி வீட்டில ரைடு நடக்கிறது. அன்னைக்கே நீங்கள்லாம் யூனிஃபார்மைக் கழட்டிப் போட்டுட்டு வீட்டுக்கு போயிருக்கனும்.” என்றெல்லாம் பேசிவிட்டோமே ஒருவேளை நம்முடைய வாயில் சுட்டுவிடுவார்களோ? இல்லையில்லை அதுபோல் நடக்காது எதற்கு? வம்பு என நினைத்திருப்பாரோ!

தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை தோற்றுவித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் ஊளையிடும் இந்த நபரை குண்டாசில் கைது செய்து ஐந்தாறு வருடங்கள் வெளியே வராதபடி உள்ள தள்ளுவதற்கு தேவையான அனைத்துத் தகுதிகளும் இந்த நபருக்கு உள்ளது. அதைச் செய்யும்வரை, இந்த வெறியரைத் தடுக்க முடியாது! அடிமை அரசு இதை செய்யாது! அப்படிச் செய்ய வைக்க வேண்டுமென்றால் மக்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை மக்கள் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.