நக்சல்களை - மாவோயிஸ்ட்களை ஒழிப்பதற்கு - சிதம்பரம் உறுதி கொண்டிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி துணை நிற்கிறார். தலைமை அமைச்சர் மன்மோகன் - நிழல் பிரதமர் சோனியா - எல்லாருக்கும் ஒரே கருத்துதான் - நக்சல்களை ஒழிக்க வேண்டும்.

மண்ணின் மணம் அறியா - இத்தாலிரத்தம்

சோனியாவைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர் மண்ணின் மணம் அறியா - இத்தாலிக்காரி. இந்திய மடையர்கள் - ஆட்சியை மீண்டும் மீண்டும் காங்கிரசிடம் தருகிறார்கள் - எதிர்கட்சி என்பவர்கள் காங்கிரசைவிட துரோகிகளாகவும் அயோக்கியர்களாகவும் இருப்பதால், இந்திரா காலத்தில் 65 லட்சமாக இருந்த நகர்வாலா ஊழல் - ராஜுவ் காலத்தில் 65 கோடி போபர்ஸ் என்று பெருகி - பிஜேப்பி காலத்தில் 65000 கோடி டெலிகாம் ஊழல் என்று வளர்ந்து - இப்ப 65000 கோடி ஸ்பெக்டிரம் ஊழல் என்று ஆகியிருக்கிறது. ராசா (மத்திய அமைச்சர்) எல்லாம் பிரதமருக்குத் தெரியும் என்கிறார். அதாவது நாடு கொள்ளையடிக்கப்படுவது பிரதமருக்குத் தெரியும். உண்மையில் அவர் கொள்ளைக்கூட்டத் தலைவர்.

அடகு வணிகம்

மூளையை மனிதர்கள் அடகு வைத்து விடுகிறார்கள் என்று கவிஞர் அன்புச்சித்திரன் அவர் நூலில் வருந்துகிறார். நூல் வெளியீட்டில் நானும் பங்கேற்பு. நான் கேட்டேன் - மூளை தனிமனித சமாச்சாரம்; அவன்கெட்டுக் குட்டிச்சுவர் ஆவது பற்றி யாருக்கும் கவலை இல்லை. தமிழ்நாடு அடகுவைக்கப்பட்டுவிட்டது; அடகு பிடித்தவன் டெல்லிக்காரன்; இந்தியா அடகு வைக்கப்பட்டுவிட்டது - அடகு பிடித்தவன் அமெரிக்காகாரன் என்றேன். பெரிய கைதட்டு. இவன் தான் தமிழன். கைதட்டினால் வேலை முடிந்தது. மூளைதான் அடகில் இருக்கே!

அருந்ததிராய்

சரி நக்சல் - மாவோயிஸ்ட் செய்தியை பார்ப்போம். இந்தியாவின் - ஒரு துணிச்சல் மிக்க எழுத்தாளர் - ஒற்றை மனித ராணுவம் - அருந்ததிராய். அவர் சத்தீசுகர் காடுகளில் பல நாள்கள் அலைந்து - மாவோவினரைப் பேட்டி கண்டு - அவர்களுடைய விழாக்களில் பங்கேற்று மிகச்சிறப்பான ஓரு கட்டுரை - ஆங்கிலத்தில் ‘அவுட்லுக்’ இல் வந்து - அதை நியூ சென்சுவரியின் ‘உங்கள் நூலகம்’ தமிழில் தந்திருக்கிறது. முழுப்பத்திரிகையும் - கிட்டத்தட்ட 48 பக்கம் - சூலை 2010 - இதழ் இவருடைய கட்டுரைதான். இந்திய நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள மடையர்கள் இக்கட்டுரையைக் கட்டாயம் படிக்க வேண்டும். முழுகட்டுரையும் சிறு நூலாக்கி - இலட்சக்கணக்கில் விநியோகிக்கலாம். நம் வசதியில் - அதன் சில பகுதிகள் மட்டும். அவுட்லுக் - உங்கள் நூலகம் - அருந்ததிராய் - எல்லாருக்கும் நன்றி.

பசுமை வேட்டை

ஈழத் தமிழர்களை இலட்சக் கணக்கில் கொன்று குவித்த - இரத்தம் காய்வதற்குள் - இந்திய அரசு-மாவோவினரைக்கொன்று குவிக்க இறங்கி யிருக்கிறது. இந்தப் போருக்குத் தேர்தல் மோசடித் திருடன் - சிதம்பரம் வைத்திருக்கும் பெயர் - பசுமைவேட்டை. சிதம்பரம் என்ன சொல்கிறான்? அப்படிப் போர் எதுவும் நடக்கவில்லை. அது ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்ட பொய் என்கிறான். வீக் பத்திரிகை எழுதுகிறது - இத்தனை டிவிசன் ராணுவம் - இத்தனை டிவிசன் - எஸ்.பி.ஆர்.எப். - (ளுஞசுகு) - எல்லாம் காட்டில் திணிக்கப்பட்டிருக்கின்றன - என்று, ஒரு டிவிசன் 1000 பேர். எல்லாம் ஒரு லட்சத்திற்கு அதிகமாக - மத்திய அரசப் படைகள்; கூடவே - மாநிலப் போலீசு.

முதலாளிகளுக்கு விலைபேசுகிறார்கள்

பல லட்சம் பழங்குடியினரின் தாயகமான மண் - முதலாளிகளுக்கு விலை பேசப்படுகிறது. தேர்தல் ஒரு புரட்டு, பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம், இந்திய அரசை வீழ்த்துவதே எம் நோக்கம் - என்ற மாவோவினர் கருதுகின்றனர். 1950ல் வந்த - இந்திய அரசியல் சட்டம் - பழங்குடி மக்களை அவர்களின் நிலங்களில் வந்தேறிகளாக ஆக்கியது. ஆங்கிலேயர் ‘மேட்ஓவர்’ செய்து கொடுத்த புது உரிமையாளர்களாக தில்லித் திருடர்கள். பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்முறை - குற்றமுள்ளதாக்கப்பட்டது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் - பழங்குடியினரை ஏதிலிகளாக் கியது. இப்ப அமைச்சரான சிதம்பரம் - முன்பு சுரங்க முதலாளிகளின் வக்கீல்தானே! கனிமங்களை கொள்ளையடிக்க பழங்குடிமக்களை அகற்ற வேண்டும். மாவோவினரைக் கொல்ல - இந்தியப் போலீசக்கு இசுரேல் பயிற்சி தருகிறது. மாவோவினர் நோய்க்கிருமி போல என்று ஊடகங்கள் விவரிக்கின்றன. இந்த மண்ணின் மக்களுக்குத் திருடர்கள் தரும் மரியாதை இப்படி!

கொள்ளையோ - கொள்ளை

முதலாளிகள் இரும்புத் தாது டன்னுக்கு ரூ 27 அரசுக்கு கொடுத்துவிட்டு - அவர்கள் டன் ரூ 5000 என்று விற்கிறார்கள். ஊழல் போலீசாரை - மாவோவினர் மீது திருப்பும் - பயங்கரவாத எதிர்ப்புக் கல்லூரி ஒன்றும் காட்டில் இயங்குகிறது. பாம்பைத்தின்று காட்டில் வாழ்வது இப்பயிற்சியின் பகுதி. இப்படி 20 கல்லூரிகளை அரசு தொடங்குமாம். எனவே பாமர ஆதிவாசிகள் அரசின் எதிரிகள்.

சிறுவர் வருகிறார்

அருந்ததியைச் சந்திக்க-காளிகோயில் அருகில் ஒரு சிறுவர்-வணக்கம் குருவே இருவரும் சொல்ல வேண்டும். சொல்லுகிறார். ‘நீ அடையாளத்துக்கு வாழைப்பழம் வைத்திருக்கவில்லையே?’ - அருந்ததி. - ‘வைத்திருந்தேன். பசியாய் இருந்தது. தின்று விட்டேன்’ இந்த 12 வயதுச் சிறுவரும் இந்திய இறையாண்மைக்குச் சவால் ஆனவர்தான்! அருந்ததி எழுத்து நம் நெஞ்சைப்பிளக்கிறது. என் கூடவந்தவர்களின் தோள் பட்டைப் பைகள் கூவின! அட! உள்ளே கோழி. ஆம் சந்தைக்கு விற்க எடுத்துச் சென்றோம். விலை போகாததால் திருப்பி எடுத்துச் செல்கிறோம். மாவோவினர் எவருக்கும் முழுமை தெரியாது. பாதை -பெயர்கள்- எல்லாம் அடுத்த ஆளைச் சந்திக்கும் வரைதான்.

பள்ளிக்கூடம் உண்டு ஆனால், ஆசிரியர் வருவதில்லை. வீட்டில் இருந்தபடி சம்பளம் பெறலாம். மருத்துவர் ஒருவர் வந்துபோய்ப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காலையில் ஞெகிழிப்பை தந்தார்கள்.

(மீண்டும் வருவேன்)

Pin It