முதன்முதலில் பட்டங்களைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனாவின் கண்டுபிடிப்பான பட்டம் நவீன விமானங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. காற்றை விட லேசான பலூன் முதன்முதலில் 1783-லும் விசை விமானம் 1903-லும் பறக்கவிடப்பட்டன என்பார்கள். இவை சீனப்பட்டத்தின் வரலாற்றை ஒப்பு நோக்கினால் மிகவும் சமீப காலங்களில் நடந்தவை என்றே சொல்ல வேண்டும். 16-17ஆம் நூற்றாண்டுகளில் ஜப்பானுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் பட்டம் விற்கவும் வாங்கவும் பட்டிருக்கின்றன. சீனாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பட்டம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது.

kite-flyingசுமார் கி.மு 200ல், ஹ்ஹன் முடியாட்சியின் போது சீனத் தளபதி ஹன் ஹ்யூஸின் ஒரு நகரின் கோட்டைச் சுவரைத் தாண்டிப் பறந்த பட்டத்தை வைத்து, மாளிகையின் அரண்களின் தூரத்தையும் எண்ணிக்கையையும் அறிந்தார்களாம் . அதன் பிறகு, நகருக்குள் புகுந்து ஆக்கிரமிக்கவும் வென்றிடவும் செய்தார்களாம் . முதன்முதலில் பட்டம் பறக்கத் தொடங்கியதற்கான சான்றுகள் இங்கிருந்துதான் தொடங்கின .

ஒரு முறை ஒரு சீன விவசாயி பறந்து விடாதிருக்க தன் தொப்பியில் ஒரு நூலைக் கட்டிக் கொண்டிருந்தான் என்றும் பலத்த காற்று அடித்ததில் முதல் பட்டம் பிறந்தது என்று சீனப் புராணக்கதை ஒன்றும் சொல்வதுண்டு. பட்டம் ஆசியாவிற்குள் பரவி, பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வேறு கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாணியையும் பாரம்பரியத்தையும் ஏற்படுத்திக் கொண்டன. பட்டம் என்பது வெறும் விளையாட்டுப் பொருள் மட்டுமில்லை. அது விஞ்ஞானத் துறைக்கும் உற்பத்தித் துறைக்கும் பங்களித்திருக்கிறது. பட்டத்தைப் போன்ற வடிவில் தான் முதன்முதலில் விமானங்கள் தயாராகின. பட்டங்களுக்கான அருங்காட்சியகம் அகமதாபாத்திலும், ஜப்பானில் டோக்யோ நகரிலும் உள்ளது. உலகப் பட்டத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் நாள் அகமதாபாதில் கொண்டாடப்படுகிறது. சுமார் 2,500 கிலோ எடையுள்ள பட்டம் ஜப்பானில் பறக்க விடப்பட்டது. அமெரிக்காவில் சுமார் 5,400 மீட்டர் உயரத்தில் பட்டம் பறக்க விடப்பட்டது.

 ஆதிகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்ட துறைகளைப் பற்றி குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானது. முதன்முதலில் இராணுவப் பயன்பாடுகளுக்குள் வந்தன. சில பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்கவென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் ............

- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)