மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் ஐம்பது வயதுக் கிழவி ஒருத்திக்கு அவள் எழுதி அஞ்சலில் போட்ட கடிதம் ஒன்றுக்கு ஐம்பது பவுன் அபராதம் விதிக்கப்பட்டது. அவள் செய்த குற்றம்தான் என்ன? இராணியின் உருவம் அச்சிடப்பட்ட தபால் தலையை அவள் தலைகீழாக ஒட்டியதற்குத்தான் அந்த தண்டனை. பெரியாருக்கு இதுபோல் அஞ்சல் தலைகளைத் தலைகீழாக ஒட்டினால் கோபம் வந்து ஒட்டியவரைத் திட்டிவிடுவாராம்.