quaide millath

 

காயிதே மில்லத்

1962 ஆம் ஆண்டு மக்மோகன் எல்லையைத்தாண்டி சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவி விட்டது. இந்தியா ரொம்ப சாதுதானே என்று வந்தவர்கள் அப்படி ஒரு பதில் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு இந்தியனும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய நேரம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் துப்பாக்கி ஏந்தி பயிற்சியில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிதவறாமல் துப்பாக்கி சுடுவதில் முதலாவதாக தேறியவர் காயிதே மில்லத்.

எம்.ஜி.ராமச்சந்திரன்

1936 ஆம் ஆண்டு வெளிவந்த 'சதி லீலாவதி' என்ற படத்தில் தொடங்கி 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தோடு எம்.ஜி.ஆர். 136 படங்களில் நடித்துள்ளார். அதாவது 43 ஆண்டுகளில் 136 படங்கள் நடித்துள்ளார். இவற்றில் 100 நாட்கள் ஓடிய படங்கள் 40. வெள்ளி விழா கண்ட படங்கள் 17. அதிக நாட்கள் ஓடிய படம் உலகம் சுற்றும் வாலிபன் - 31 வாரங்கள்.

1950 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தென்னகம் முழுக்க 35,000 ரசிகர் மன்றங்களும் 20,00,000 ரசிகர்களும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருந்து வருகின்றனர்.

- வைகை அனிஷ்