மயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டு என்ற கிராமத்தில் திரு ஸ்ரீனிவாசன் - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு 11.07.1925 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். சிறு வயதில் சிதம்பரத்தை அடுத்த திருவேட்களம் என்ற ஊரில் வாழ்ந்து வரும்பொழுது தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பழக்கத்தால் தமிழ் ஆர்வம் ஏற்பட்டது.

பள்ளிப்படிப்பினை முடித்த பின்பு தருமபுரம் ஆதீனத்தில் கணக்கராக வேலைக்கு சேர்ந்து பணியாற்றும் பொழுது இவரது ஆற்றலைப் பார்த்த தம்பிரான் இவரைத் துறவறம் பூண வேண்டியதும் அதனை ஏற்று யாத்திரைகசாயம் (காவித்துணியை பூசை மடத்தில் வைத்து எடுத்து உடுத்திக் கொள்ளச் செய்வதாகும்.) பெற்று பின்பு மந்திரக்கசாயம் பெற்று கந்தசா மித்தம்பிரான் என்று பெயர் பெற்று பணியாற்றினார். பின்பு குன்றக்குடி மடத்தில் இருந்து மிகவும் வேண்டி அழைத்ததால் அங்கு சென்று மடத்தின் தலைமைப் பொறுப்பினை 1949 ல் ஏற்றார்.

திருவேட்களம் என்ற ஊரில் வாழும்போழுது திரு விபுலானந்த அடிகளுடன் தீண்டாமை ஒழிப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டார்.

ஒருமுறை காலில் செருப்பு இல்லாமல் ரசாயன ஆலை ஊழியர்கள் இருந்த பொழுது அவர்களை செருப்பு அணிந்து பணி புரியுமாறு வேண்டிக்கொண்டார். ஊழியர்கள் அடிகளார் காலணி அணியாதது ஏன் என வினவிய பொழுது கூறியது.

"அரிசனங்கள் வாழும் பகுதிக்குச் சென்ற போது அவர்களின் துன்பத்தை நானும் உணரும் வகையில் வெறுங்காளுடனே நடந்து சென்றேன். பிறகு அதையே பழக்கமாக்கிக் கொண்டேன். இப்போது என் நடைமுறையில் அனைத்தும் நடையன் (செருப்பு) போடாமல் தான்."

மனிதநேயம் மிக்க இந்த மாமனிதன் தந்தை பெரியாருடன்  நட்புடன் இணைந்ததை "கருப்பும் காவியும்" இணைந்ததாக எழுதியுள்ளனர். தோழர் ஜீவானந்தம் அவர்களுடன் பழகிய பொழுது "சிவப்பும் காவியும்" இணைந்ததாக பதிவு உள்ளது. பட்டிமன்ற ஆசான், மனித நேய பண்பாளர் திருமிகு அடிகளார் 14.04.1995 அன்று மறைந்தார்.