பூமியின் மேற்பகுதியிலிருந்து மையம் வரை உள்ள ஆழம் சுமார் 4000 மைல். பெட்ரோலியம், உலோக தாதுக்களுக்காக பூமியில் சுமார் 5 மைல் ஆழம்வரை தோண்டிப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே கடுமையான வெப்பம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனிதனால் உள்ளே தோண்டிக் கொண்டே போக முடியாது. அப்படியே தோண்டிக் கொண்டு போவதாக கற்பனை செய்தால், இந்தியாவில் குழி தோண்டி உள்ளே இறங்கும் மனிதன் பூமியைக் குடைந்து கொண்டு வெளியே வரும்போது அவன் அமெரிக்க மண்ணை மிதிப்பான்.