நாம் அச்சுறும்போது வெண்மைச் சாயலுடையவராய் மாறுகிறோம். ஏனெனில் கன்னங்களிலுள்ள குருதி மிக அவசரமான பணியைச் செய்வதற்காகத் திருப்பி விடப்படுகிறது. அதே சமயத்தில் நமது நெஞ்சு வேகமாகத் துடிக்கும். மூச்சு விரைவாக இழுத்து விடப்படும்.

நம் இருதயம் ஒரு நிமிடத்திற்கு எழுபது அல்லது எண்பது முறை நாம் சும்மா இருக்கும்போது அடித்துக்கொண்டு நம் உடலில் பாகங்களுக்குக் குருதியைத் தள்ளும். உடல் இயங்குவதற்கு இன்றியமையாத தேவையான உணவிலுள்ள ஊட்டச் சத்தினையும் சுவாசிக்கும் சாற்றிலுள்ள உயிர்க் காற்றையும் (Oxygen) குருதி சுமந்து செல்லும்.

நாம் நடக்கும்போது அல்லது அமர்ந்திருக்கும்போது நம்முடைய தசைகள் வேலை செய்வதை விட நாம் தீவிர உடற்பயிற்சி செய்யும்போது அவை மிக இறுக்கமாகவும் விரைவாகவும் வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆகையால் அவைகளுக்கு மிகைப்படியான ஊட்டச் சத்தும் உயிர்க்காற்றும் தேவைப்படுகின்றன. இருதயத்திலிருந்து குருதியை எடுத்துத் தள்ளும் செயல் மூச்சியக்கம், உணவுச் செரிப்பு போன்ற உடலுள் நிகழ் வினைகளை நெறிப்படுத்தும் தானே இயங்கு நரம்பு மண்டல மையப் பகுதிக்குத் தசை நாண்கள் செய்திகளைத் தாங்கிச் செல்கின்றன. இந்த நரம்பு மண்டலமையப் பகுதி அய்ப்போதலம்ஸ் (Hypothalamus) என அழைக்கப்படுகிறது.

தானே இயங்கு நரம்பு மண்டல மையத்திலிருந்து தூண்டு விசைகள் முதுகுத் தண்டுவடம் வரை பயணம் செய்கின்றன. அப்போது மற்ற நரம்பு உயிர்மங்களை (never cells) உடனதிர்வு தசை நரண்களை – அத்தூண்டு விசைகள் ஊக்குவிக்கினறன. அந்த உடனதிர்வு தசை நாண்கள் நரம்பு மண்டல மையத்தில் அல்லது சிறுநீரகங்களுக்குச் சற்று மேற்பகுதியிலுள்ள குண்டிக்காய்ச சுரப்பிகளின் தண்டெலும்பு உட்சோற்றில் முடிகின்றன. இந்தக் குண்டிக்காய்ச் சுரப்பிகள் ஆர்மோன் இயக்குநீரை இரத்த ஓட்டத்தில் விடுகின்றன. அவ்வாறு இயக்குநீரை விடுவதால் (1) இருதயம் வேகமாகவும் திறனுடனும் துடிக்கிறது. (2) நுரையீரலிலுள்ள காற்றுக் குழாய் விரிவுபடுகிறது. (3) தசைகளுக்கு வழங்கும் குருதிக்குழாய் அகலப்படுகிறது. (4) குருதியில் உள்ள சக்தி தரும் குளுக்கோசின் செறிவை மிகுதிப்படுத்துகிறது.

(உடலும் மருந்தும் நூலிலிருந்து)