தேவையானவை:

சுரைக்காய்.. சிறியது...1
சீனி................................... 1 ஆழாக்கு
சோளமாவு(corn flour).......4 தேக்கரண்டி
முந்திரி.............................8
உலர் திராட்சை................8
ஏலம்...................................2
கிராம்பு................................2
கேசரிபொடி........................ஒரு சிட்டிகை
நெய்.....................................6 தேக்கரண்டி.

செய்முறை:

சுரைக்காயை தோலைச் சீவியபின், அதனை காரட் சீவும் கட்டையில் மெலிதாக சீவவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு சொட்டு நெய் விட்டு முந்திரி, திராட்சை, கிராம்பு, ஏலத்தை வறுக்கவும். ஏலக்காயையும், கிராம்பையும் பொடி செய்யவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சோளமாவை எண்ணெய் இன்றி, அடிப் பிடிக்காமல், கருகிவிடாமல்,, சிறு தீயில் வறுத்து எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் சீவிய சுரைக்காயைப் போட்டு அதிலுள்ள நீர் சுண்டும்வரை வதக்கவும். கேசரிப் பொடியைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் சீனியைப் போட்டு கிளறவும். சீனி கெட்டியாகும் போது வறுத்த சோளமாவை அதில்  போட்டு, கட்டி பிடிக்காமல் கிளறவும்.

பின்   அதில் முந்திரி, திராட்சை, ஏலம் +கிராம்பு பொடியைப் போடவும்.நெய்யை ஊற்றிக் கிளறவும். 

சுரைக்காய் அல்வாவைச் சாப்பிட்டுப் பாருங்களேன்..! கலக்கலாய் இருக்கும்!

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)