தேவையான பொருட்கள்:
கோழிக் கறி - 1 கிலோ. கொத்தமல்லி - சிறிதளவு வெங்காயம் - 1. சீரகம் - 2 தேக்கரண்டி. நெய் - 3 தேக்கரண்டி. மிளகாய் வத்தல் - 10 மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி. ஏலம் - 2. பூண்டு - 10. வினிகர் - 2 தேக்கரண்டி


செய்முறை:

கோழிக் கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மசாலாவை வினிகரில் விட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் மசாலாவை இட்டு, வதக்கவும். இப்போது கோழிக் கறியை தேவையான அளவு உப்புடன் அதில் சேர்த்து, கொஞ்ச நேரம் அப்படியே வேக விடவும். இன்னொரு பாத்திரத்தில் உருளைக் கிழங்கு ஒன்றை எடுத்து நான்கு துண்டாக்கி போட்டு அதை வதக்கவும். பின்னர் அதை எடுத்து வெந்து கொண்டிருக்கும் கறியில் போடவும். ஒரு பத்து நிமிஷம் அப்படியே வேக வைத்தால் கெட்டியான குழம்பு மாதிரி வந்திருக்கும். அதை சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.