தேவையானவை:

பாறை மீன் /எந்த மீனும் ................1 /2 கிலோ
வெங்காயம்........................................10
இஞ்சி..................................................1 இன்ச் நீளம்
பூண்டு.................................................10
சீரகம் .................................................1 /2 தேக்கரண்டி
மிளகு, சீரகம்.....................................1 /2 தேக்கரண்டி 
சோம்பு...............................................1 /4 .தேக்கரண்டி
மல்லி பொடி.................................... 1 தேக்கரண்டி
மிளகுப்பொடி.................................... 1 தேக்கரண்டி
சீரகப்பொடி..........................................1 தேக்கரண்டி
தயிர்.....................................................1 தேக்கரண்டி
சோள மாவு (corn flour )..................... 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு...............................1 தேக்கரண்டி
உப்பு ...................................................தேவையான அளவு
எண்ணெய்..பொரிக்க.......................75 மில்லி

செய்முறை:

மீனை நன்கு சுத்தமாக கழுவிக்கொள்ளவும். வெங்காயத்தை உரித்து, அதனுடன் சீரகம் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, பூண்டை நன்கு அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு போட்டு சிவந்ததும், அதனை எடுத்து மீனின் மீது போடவும்.

paarai_meen_varuval_370மீனை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி, மிளகு,சீரகப் பொடி, தயிர்,எலுமிச்சை சாறு, சோள மாவு+உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசற வும். சோள மாவு போடுவது மசால நன்கு ஒட்ட வும், சமயத்தில் மீன் உடையாமல் இருக்கவும் தான். வேண்டாம் என்றால் சேர்க்க வேண்டாம். இதனை குளிர் பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின்னர் அடுப்பில் கடாய்/தவா வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மீனை எடுத்து உடையாமல் அடுக்கவும். தீயை சிறுத்து வைக்கவும். மீன் போட்டு 5 நிமிடம் கழித்து/ஒரு பக்கம் வெந்ததும்,மீனை பத்திரமாக உடையாமல், அடியில் மெலிதான கரண்டி கொடுத்தி திருப்பவும். மறுபக்கமும் வெந்ததும்.. மீனை எடுத்து விடலாம். தேவைப்பட்டால், நீங்கள் கில்லாடி என்றால் மீனை ஓரிரு முறை திருப்பி போட்டு முறுகலாய் எடுக்கலாம்.

இந்த வறுவல் மீன் காரம் இருக்காது. சிவப்பாய் இருக்காது. ஆனால் சுவை படு டேஸ்டியாய் இருக்கும். சும்மாவே லபக் லபக் என்று விழுங்கிவிடுவீர்கள்..!