தேவையான பொருட்கள்

நண்டு - 6

கடுகு - அரை தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி

தயிர் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - கொஞ்சம்

அரைப்பதற்கு மசாலா பொருட்கள்:

தேங்காய் - கால் மூடி

பெரிய வெங்காயம் - 3

இஞ்சி - ஒன்றரை அங்குலத் துண்டு

பச்சை மிளகாய் - 7

பூண்டு - 1

சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு

புதினா - சிறிதளவு

செய்முறை

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து சதைப் பகுதியை எடுத்துத் தயிருடன் கலக்கி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்க வேண்டும். பிறகு அரைத்த மசாலாவை இதில் போட்டு, சிறிது நேரம் வதக்க வேண்டும். எலுமிச்சை ரசத்தைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.

தயிருடன் உள்ள நண்டுக்கறியை இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பைச் சேர்க்க வேண்டும். அரைமூடி தேங்காயைத் துருவி பால் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நண்டுக்கறி வெந்தவுடன் தேங்காய்ப்பாலை ஊற்றி லேசாக கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.