தேவையானவை:

கத்தரிக்காய்...................................1/4 கிலோ
சின்ன வெங்காயம்......................50 கிராம்
மிளகாய்............................................2
மல்லி.................................................1 தேக்கரண்டி
மிளகு.................................................1/2 தேக்கரண்டி
சீரகம்............................................... 1/2 தேக்கரண்டி
நிலக் கடலை.................................1 தேக்கரண்டி
தேங்காய்.(தேவையானால்).. ..1/2 தேக்கரண்டி
கடுகு, உ.பருப்பு...................... .....1/4 தேக்கரண்டி
எண்ணெய்...................................... 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை................................1 கொத்து
உப்பு .............................................. தேவையான அளவு

செய்முறை:
 
வெங்காயத்தை உரித்து நீள வாக்கில் நறுக்கவும். கத்தரிக்காயை நீளவாக்கில் கொஞம் மெலிதாக நான்காக/ஆறாக  நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, சூடானதும், அதில் மிள்காய், மல்லி, மிளகு, சீரகம், நிலக்கடலை போட்டு வறுக்கவும். எண்ணெய் வேண்டாம். கறிவேப்பிலை + தேங்காயைத் தனியாக வறுக்கவும்.

வறுத்த மிளகாய், மல்லி, மிளகு, சீரகத்தை மிக்சியில் பரபர வென்று அரைக்கவும். பின் அதனுடன் வறுத்த தேங்காய் + கறிவேப்பிலை போட்டு ஒரு சுற்று சுற்றவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு உ.பருப்பு போட்டு சிவந்ததும், அதில் வெங்காயம் + கத்தரிக்காய் + உப்பு போட்டு நன்கு வதக்கவும். கத்தரிக்காய் நன்கு வதங்கி, சுருண்ட பின் அதில் அரைத்த பொடியைப் போட்டு நன்கு கிளறவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு, 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

இந்த கத்தரிக்காய் மிளகு வதக்கல் கலக்கலாய் இருக்கும். இதனை சாம்பார் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் & சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.