நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாயப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.