ஒரு நடுத்தர வயது ஆண் ஒரு பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்து, விற்பனை செய்யும் பெண்ணிடம், "என் மனைவிக்கு பிறந்த நாள் பரிசளிக்க விரும்புகிறேன்" என்றார்.

விற்பனைப் பெண்: 'நிச்சயமாக சார், நல்ல விலையுயர்ந்த உள்ளாடை அல்லது சுடிதார் தரட்டுமா  ?' என்றாள்.

ஆண்: 'ஏதாவது கொடு' என்றார்.

விற்பனைப் பெண்: என்ன நிறத்தில்?

ஆண்: அது முக்கியமில்லை, ஏதாவது நிறம்.

விற்பனைப் பெண்: அளவு சொல்லுங்கள்.

ஆண்: கவலையில்லை, ஏதாவது அளவு.

விற்பனைப் பெண் குழப்பமடைந்ததைப் பார்த்து, அந்த ஆண், "என்ன வாங்கினாலும், எப்பொழுது வாங்கினாலும் என் மனைவி திரும்பி உங்களிடம் வந்து மாற்றித் தரச் சொல்வாள், அதனால்தான் கவலையில்லை என்றேன்" என்றார்.