இந்து வாரிசு உரிமை சட்டப்படி கணவர் இறந்துப்போனால், அவருடைய மனைவி, குழந்தைகள், தாய் இவர்கள் அனைவரும் முதல் வகுப்பு வாரிசுதாரர்கள் ஆவார்கள். அதனால் வாரிசு சான்றிதழில் மாமியாரின் பெயர் போடப்படுவது முறையானதே. ஆனால், பென்ஷன் தொகை என்பது மனைவிக்கு மட்டுமே உண்டு. அதேபோல், கருணையின் அடிப்படையில் வேலை என்பதும் மனைவிக்கு மட்டுமே. வாரிசு சான்றிதழ் வட்டார தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.