பூர்வீக சொத்து என்றால் பங்கு உண்டு. சுயசம்பாத்தியம் என்றால், அம்மா இறப்பதற்கு முன், அவருக்கு பின் அத்தனை சொத்துக்களும் மகன்களுக்கு மட்டுமே என்று உயில் எழுதி வைத்திருந்தால் அதில் மகளுக்கு உரிமையில்லை. அதே நேரத்தில் மகளுக்கு பங்குண்டு என எழுதியிருந்தாலோ அல்லது உயிலே எழுதாமல் இருந்தாலோ சொத்தில் ஒரு பங்கு மகளுக்கும் உண்டு.