ஆம்,1956-ம் ஆண்டின் Hindu Minority and guardianship Act 1956 பிரிவு (6) ன் படி

(1) ஒரு ஆண்பிள்ளை, திருமணமாகாத பெண் இருவருக்கும் அவர்களது உடல், வாழ்க்கை, சொத்துக்கள் அனைத்துக்கும் தந்தைதான் காப்பாளர். அவருக்குப் பிறகு தான் தாய். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ ஐந்து வயதுவரை தாயின் பொறுப்பில் இருப்பது சிறந்தது (இது பொறுப்பு மட்டுமே – காப்பாளர் என்கிற உரிமை அல்ல)

(2) சட்டத்துக்குப் புறம்பாகப் பிறந்த குழந்தைகள் எனில் தாய் தான் காப்பாளர்; தாய்க்குப் பிறகு தான் தந்தை.

மதம் மாறிய தாயோ, தந்தையோ அல்லது சந்நியாசம் வங்கிவிட்டவரோ இந்து சட்டப்படி காப்பாளராக இருக்க முடியாது. தந்தை மனநிலை பிறழ்ந்தவராக இருந்தால்கூட, தாய் தானாக பொறுப்பேற்கும் காப்பாளராக முடியாது. அவர் தன்னை காப்பாளராக நியமிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் அண்மைக்காலங்களில் தாய், தந்தை இருவரில் யாரிடம் குழந்தை வளர்ந்தால் பாதுகாப்போ அவரிடம் குழந்தையை ஒப்படைக்கச் சொல்லி தீர்ப்புகள் வந்துள்ளன. இருப்பினும் சட்டப்படி குழந்தையின் காப்பாளர் தந்தைதான். இதை மாற்றுவதற்கு தேசிய பெண்கள் ஆணையம் முயற்சித்து வருகிறது.

(நன்றி: வழக்கறிஞர் அருள்மொழி, விகடன் பிரசுரத்தின்கேளுங்கள் சொல்கிறோம்புத்தகத்திலிருந்து…)