two wheeler

Clutch என்பது இன்ஜினையும் கியரையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலம் ஆகும். அதாவது ஆற்றல் இன்ஜினில் இருத்து Clutch வழியேதான் கியருக்கு கடத்தப்படும்.

கிளட்சின் பாகங்கள்

Clutch disc

Clutch disc ஆனது Flywheel மற்றும் Pressure plate இடையே அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியே தான் ஆற்றல் கியருக்கு செல்லும். அதாவது Clutch disc மட்டுமே கியருக்கு செல்லும் Shaft உடன்இணைக்கப்பட்டிருக்கும். Flywheel மற்றும் Pressure plate இன்ஜினுடன் இணைந்து இயங்கும் படி அமைந்திருக்கும். எனவே Clutch plate இதனுடன் இணைவதன் மூலம் ஆற்றல் கடத்தப்படும்.

Flywheel

பொதுவாக Flywheel என்பது இன்ஜினில் இருந்து பெறப்படும் Torqueஐ சமநிலையில் வைத்திருக்கப் பயன்படும். Clutch-ஐப் பொருத்தமட்டில் Flywheel ஆனது இன்ஜினுடன் இணைந்து இயங்கும் போது Clutch plate-ன் புறப்பரப்பு Flywheel-ன் பரப்புடன் இணையும். அப்போது Torque ஆனது கியருக்கு இதன் வழியே கடத்தப்படும்.

Pressure plate

Pressure plate ஆனது clutch disc-கிற்கு மறுபுறம் காணப்படும். மேலும் இது Flywheel உடன் இணைக்கப்பட்டு ஒன்றாக சேர்ந்து இயங்கும் படி அமைக்கப்பட்டிருக்கும். இதில் முக்கியமாக diaphragm spring
பொருத்தப்பட்டிருக்கும்.

Diaphragm spring

நாம் Clutch pedal-ஐ அழுத்தும் போது clutch disc-ல் இருந்து பெறப்படும் அழுத்தத்தை குறைக்க பயன்படும் அதாவது ஒரு Throwout bearing மூலம். மேலும் அச்சமயத்தில் pressure plate மற்றும் Flywheel ஆகியவற்றிற்கு இடையே ஒரு இடைவெளி உருவாக்கப்பட்டு clutch disc இடையூறு இன்றி சீராக சுற்றும்.

Clutch disc-ல் Spring பொருத்தப்பட்டிருப்பது ஏன்?

4 Stroke இன்ஜினில் Flywheel ஆனது எல்லா நேரமும் ஒரே சீராக இயங்காது. Power stroke-ன் போது திடீரென அதிகமாகலாம்; இதர Strokeன் போது குறையலாம். எனவே இதன் மூலம் ஏற்படும் அதிர்வுகளை குறைக்கவும், சீரான இயக்கம் பெறவும் பயன்படுகிறது. அதனால் தான் தற்போதைய வாகனத்தில் dual mass flywheel பயன்படுத்தப்படுகிறது. DMF ஆனது தானாகவே இன்ஜினில் இருந்து பெறப்படும் அதிர்வைக் குறைக்கும்; Spring தேவைப்படாது.

Performance clutch என்றால் என்ன?

Performance clutch-ல் தரமான heavy spring பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலும் Clutch disc ஆனது பல வகையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் Heavier spring பயன்படுத்தப்படுவதால் இதன் மூலம் அதிகப்படியான Torque-ஐ கடத்தி கியருக்கு கொடுக்கலாம்.

Clutch disc-ஐ கரிம சேர்மங்களில் இருத்து தயாரிப்பதின் மூலம் அது நீடித்து உழைப்பதாகவும், Flywheel உடன் சீராக இணையக்கூடியதாகவும் இருக்கும். மேலும் Cevler, carbon, ceramic போன்றவற்றை பயன்படுத்தினால் அதிக வெப்பநிலையிலும் சீராக இயங்கும்.

Performance cluth-ல் clutch disc ஆனது பகுதி, பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும. (Star வடிவில்) ஏனென்றால் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும், மேலும் குறைந்த பரப்பில் செயல்படும் விசையில் இருத்து
அதிக அழுத்ததைப் பெறமுடியும். சில பொருட்கள் அதிக அழுத்தத்தில் சிறப்பான பிடிமான விசையைத் (Grip) தரும். எனவே அவ்வகையான பொருட்களில் இருந்து Clutch disc தயாரிக்கப்படுகிறது.

அதிக ஆற்றல் மிக்க வாகனத்தில் பயன்படுத்தப்படும் Performance Clutch disc ஆனது Star வடிவில் இல்லாமல் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் வெப்பநிலையை சமன் செய்ய சிறிய அளவில் Cut off செய்யப்பட்டிருக்கும்.

மேலும் Sintered steelல் தயாரிக்கப்படும் Clutch ஆனது மற்றைய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் Clutch ஐ விட அதிக வெப்பநிலையையும் தாக்குப்பிடித்து, அதிகப்படியான பிடிமான விசையையும் தரும்.

இவை தான் Performance clutch ஆகும். எனவே தான் தற்போதைய வாகனங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது.

- ஷேக் அப்துல் காதர்