ஒரு தனிமத்தில் நேர்மின் அயனி (proton), எதிர் மின்னயனி( electrons), நொதுமி( neutron) ஆகியவை இருக்கும். இவற்றில் எதிர்மின்னயனிகளின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். ஒவ்வொரு தனிமத்திலும் எதிர்மின்னயனிகளின் ஓட்டத்திற்கு ஒரு தடை இருக்கும். இதைத்தான் மின்தடை (resistance) என்கிறோம். இம்மின்தடை அதிகமாக இருக்கும்போது மின்னோட்டம் குறைவாகவே இருக்கும். எனவேதான் மின்தடை குறைவாக உள்ள மாழைகளை (metal) மட்டுமே நாம் மின்சாரத்தைக் கடத்தப் பயன்படுத்துகிறோம். [எ.கா: செம்பு (copper), அலுமினியம்]

மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்தச் செம்பு, அலுமினியம் ஆகிய மாழைகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இம்மாழைகளின் வழியே ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இரண்டு வாட் மின்சாரத்தைச் செலுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 1 வாட் மின்சாரம் மட்டுமே சென்று சேரும்.  அதாவது, ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு மின்னிழப்பு ஏற்படுகிறது.

மின் உற்பத்தித் திறன்(2 வாட்) – மின் இழப்பு(1 வாட்)  = மின் பயன்பாட்டுத்திறன்(1 வாட்)

இந்த இழப்பைக் குறைப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னிழப்பே இல்லாமல் மின்சாரத்தைக் கடத்தும் மாழைகள் மீக்கடத்திகள் (super conductors) எனப்படுகின்றன. மின்னிழப்பு மின்தடையினால் ஏற்படுகிறது என்பதை மேலே பார்த்தோம்.

சில தனிமங்கள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்தடையே இல்லாமல் மின்சாரத்தைக் கடத்துகின்றன. இப்பண்பை மீக்கடத்தும் பண்பு என்கிறோம். மின்தடையே இல்லாததால் மீக்கடத்திகளைப் பயன்படுத்தும்போது மின்னிழப்பு இருக்காது. அதாவது மீக்கடத்தியின் மூலமாக இரண்டு வாட் மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்தினால், இரண்டு வாட் மின்சாரமும் முழுமையாகச் சென்று சேரும்.

இவ்வாறு குறைந்த வெப்பநிலையில் பயன்படும் இம்மீக்கடத்திகளை இயல்பு வெப்பநிலையில் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாராய்ச்சிகளுக்கு வெற்றி கிட்டும்போது, குறைந்தது சென்னையைத் தவிர பிற நகரங்களில் நிலவும் மின்வெட்டுகள் குறையும்.

-       வசந்தகுமார் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)