Plutoநமது சூரிய குடும்பத்தில் கடைசி கோளாக அறியப்பட்ட புளூட்டோ என்ற சிறிய கோள் கண்டுபிடிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை நமது அறிவியல் பாடத்திட்டத்தில் புளூட்டோ என்பது 9 ஆவது கோளாகவே அறியப்பட்டது. ஒரு கோளுக்கான எந்த ஒரு பிரத்தியேக தனித் தன்மையும் அதனிடம் இல்லையென இந்தக் கோளை ஆகஸ்ட் 2006ல் The International Astronomical Union (IAU) என்ற அமைப்பு 'dwarf planet' என அறிவித்து விட்டது.

IAU அமைப்பின் கூற்றுப்படி ஒரு கோள் என்றால் அதற்கென சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும். கோளுக்கான மூன்று சிறப்பம்சங்கள்: 1. சூரியனைச் சுற்றி (It is in orbit around the Sun) நீள்வட்டப் பாதையில் சுற்றி வர வேண்டும் 2. போதுமான நிறையோடு (It has sufficient mass to assume hydrostatic equilibrium) வட்ட வடிவில் இருக்க வேண்டும் 3. ஒரு ஈர்ப்பு விசையை உருவாக்கி தனது நீள்வட்டப் பாதையில் சுற்றியுள்ள பொருட்களை (It has “cleared the neighborhood” around its orbit) ஈர்பதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் பிற பொருட்களை (objects) தன்னுள் ஈர்த்து அந்தப் பாதையை தனக்கு மட்டும் உரியதாக மாற்றிக் கொள்ளவது. மூன்றாவதாகக் கூறிய கோட்பாடு புளூட்டோவுக்கு இல்லாததால் இதனை 'dwarf planet' அட்டவணையில் சேர்த்து விட்டார்கள்.

புளூட்டோவுக்கு தனியாக ஒரு சுற்றுவட்டப் பாதை இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் பக்கத்து கோளான நெப்டியூன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வெளியே வந்து விடும்.

ஒன்பதாவது கோள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக 1894 ஆம் ஆண்டே Lowell Observatory in Flagstaff, Arizona -வில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதற்கு 'Planet X' எனவும் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால், 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ல் தான் அதற்கு ஒரு முழுமையான புகைப்பட வடிவம் கிடைத்தது. அதைக் கண்டுபிடித்தாவர் விண்வெளி ஆராய்ச்சியாளர் Clyde W. Tombaugh. அப்போது அவருக்கு வயது 23. இரவு நேரத்தில் விண்வெளியைப் படமெடுத்து அதனை blink comparator என்ற இயந்திரத்தின் உதவியால் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு புகைப்பட வடிவத்தைக் கொண்டு வந்தார். அப்போது அந்தக் கண்டுபிடிப்பு உலகமுழுவதும் பரவலாக பேசப்பட்டது.

இதற்கு வேறு ஒரு புதிய பெயரை வைக்க வேண்டும் என 1000-க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலித்து, கடைசியில் இங்கிலாந்தில் வசித்த 11 வயது சிறுமி Venetia Burney தேர்ந்தெடுத்த 'Pluto' என்ற பெயரை சூட்டினார்கள். புளூட்டோ என்றால் ரோமானிய கற்பனைக் கதைகளில் வரும் நிழல்உலகக் கடவுளின் பெயர். அறிவியலுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை. 'Pluto' என்ற பெயர் அவர்கள் பரிசீலித்த 1000 பெயர்களில் ஒரு பெயர். அவ்வளவுதான்.

மூலம்:https://www.loc.gov/everyday-mysteries/item/why-is-pluto-no-longer-a-planet/

புளூட்டோ நிலவை விட சிறியது. பார்ப்பதற்கு இதயம் போன்ற அமைப்பாகக் காட்சியளிக்கும். அதன் மொத்த ஆரம் (radius) 715 மைல்கள் (1,151 கிலோமீட்டர்). மொத்த பரப்பளவு 1400 மைல்கள் (2380 கிலோமீட்டர்). சூரியனிலிருந்து சுமார் 3.7 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. பூமியிலிருந்து 40 மடங்கு அதிக தொலைவில் இருக்கும் இந்தப் பகுதியை 'kuiper belt' என அழைக்கின்றனர். இதில் ஒரு நாள் என்பது 153 மணி நேரங்கள் ஆகும். அதாவது, பூமியின் 6 நாட்கள் சேர்ந்தது தான் அங்கு ஒரு நாள்.

பாறைகள் மற்றும் பள்ளத்தாக்கு நிறைந்த பகுதி. இதில், மீத்தேன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் 'frost coat surface' போன்று அதிகம் காணப்படுகிறது. இங்கு வெப்பநிலை -375°F முதல் 400°F வரை இருக்கும். புளூட்டோவின் மேற்பரப்பு அதிகளவில் குளிர் நிறைந்த பகுதியாகும். புளூட்டோவுக்கு ஐந்து துணைக்கோள்கள் இருக்கின்றன. அதில் பெரியது 'Charon' ஆகும்.

ஒருவேளை நாம் புளூட்டோவில் வசிப்பதாக இருந்தால் 248 பூமியின் ஆண்டுகள் கழித்துதான் நமது முதல் பிறந்தநாள் வரும்.

Source:https://www.pri.org/file/2020-02-19/happy-birthday-pluto

- பாண்டி