எதைப் பார்ப்பதில் உங்கள் நாட்டம் அதிகமாக உள்ளது. சாக்லெட் என்றால் நீங்கள் நன்னம்பிக்கையாளர். சிலந்தி என்றால் அவநம்பிக்கையாளர். நாக்கில் எச்சில் ஊறவைக்கும் சாக்லெட்டின் படம் ஒரு பக்கம், அறுவெறுப்பை ஏற்படுத்தும் சிலந்தியின் படம் மறுபக்கம். உங்கள் கவனம் எதில் செல்லுகிறது?

சாக்லெட்தான் உங்களைக் கவர்கிறது என்றால் நீங்கள் ஒரு நன்நம்பிக்கையுடையவர், மாறாக கவனம் சிலந்தியின் மீது நின்றால் நீங்கள் அவநம்பிக்கையுடையவர். சிலர் நல்லதை விட்டுவிட்டு கெட்டது நடந்தவிடுமோ என்று அவநம்பிக்கை அடைகிறார்கள்.

சிலர் எப்போதும் கெட்டதை நினைத்துத் தவிப்பது ஏன் என்பது தெரிந்துவிட்டது. செரட்டோனின் எனும் நரம்பு சம்மந்தப்பட்ட பொருளால்தான் மக்களிடம் பலதரப்பட்ட மனோபாவங்கள் ஏற்படுகின்றன. செரட்டோனின் எந்த அளவு மூளையில் உற்பத்தியாகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எந்த அளவுக்கு அது நீடித்து மூளையில் செயல்படுகிறது, அதைக் கடத்தி இயக்கி வைக்கும் வேறு பொருள்களின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தும் குணங்கள் மாறுபடுகின்றன.

- முனைவர் க.மணி