உணவு அல்லது நீரைக் காட்டிலும் உடலுக்கு மிக அவசரமான இன்றியமையாத தேவை சுவாசிக்கும் காற்றிலுள்ள உயிர்க் காற்றாகும். நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது நுரையீரல் வழியாகக் குருதி உயிர்க்காற்றை உறிஞ்சிக் கொள்கிறது. பின் அக்குருதி இருதயத்தின் இழு ஏற்றி விசையால் (pump) நாடி நரம்புப் பாய் குழாய்களுக்கு (veins of arteries) ஏற்றப்பட்டு உடல் முழுவதும் அவ்உயிர்க்காற்று எடுத்துப் பரப்பப்படுகிறது. நரம்பு மண்டலத்தின் மூலம் மூளை தன்னைத் தவிர இருக்கும் உடற் பகுதிகள் முழுவதையும் கட்டுப்படுத்துவதால் குருதியும் உயிர்க் காற்றும் அடைய வேண்டிய இடமாக அம்மூளை அமைகிறது. மூளை போதுமான அளவு அவ்விரண்டையும் பெறாவிட்டால் கைகளையும் கால் களையும் தள்ளாடச் செய்து மயக்கம் ஏற்படுத்தும்.

இம்மயக்கம் ஏற்படுவதற்குப் பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குருதி ஓட்டத்தைத் தடுப்பது. இறுக்கமான கழுத்துப் பட்டை அணிவது. இன்னும் இதற்கு மேலான காரணங்கள் கூட அடிப்படைகளாய் அமையக் கூடும். ஆனால் மயக்கம் பெரும்பாலும் புழுக்கமான உயிர்க்காற்றுக் குறைந்த இயற்கைத் தன்மையால் அதாவது உயிர்க்காற்றுக் குறைவா லேயே ஏற்படுகிறது.

உன்னோடு இருக்கும் ஒருவன் மயக்கம் அடைந்தால் அவன் புதிய நல்ல காற்றோட்டமுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். ஆடைகளை இளக்கிவிட வேண்டும். இரண்டு முழங்கால்களுக்குமிடையில் தலையை வைத்து, குறைக்குருதி வழங்கல், மேல் நோக்கித் தொத்திச் சென்று தலையுள் ஏறாமல், கீழ்நோக்கிக் குருதியை வழங்கச் செய்ய வேண்டும். வழக்கமான குருதிச்சுற்று விரைவில் மீண்டும் கிடைக்கப்பெற்று அந்த நபர் நல்ல நிலைக்குத் திரும்பி எவ்விதச் சிதைவும் இன்றி வந்து விடுவார்.