அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறிதான். சிலருக்கு சிறுவயதிலேயே சர்க்கரை நோய்  வரக்கூடிய வாய்ப்புள்ளது. தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனை மட்டும் செய்தால், ஒரு சில நேரங்களில் தெரியாது. ரத்தத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும். பெண்களுக்கு யூரினரி இன்ஃப‌க்சன் என்பது பொதுவான பிரச்சனை. இதனால்கூட அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். எனவே, ஒரு மருத்துவரை அணுகி, முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.