உலகில் ஒரு மில்லியன் சிறுநீரக நோயாளிகள் வாரம் இரண்டு அல்லது ஒரு முறை டயலிசிஸ் முறையில் இரத்தத்திலிருந்து சிறுநீரைப் பிரித்துக் கொள்கிறார்கள். இதற்காக வரந்தோறும் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. செலவு, கால விரயம், தொந்தரவு என்று சொல்ல முடியாத வேதனைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இவர்களுக்காக வேண்டி 24 மணி நேரமும் உடலில் வேலை செய்யும், பெல்ட்டில் மாட்டிக்கொள்ளக்கூடிய செயற்கை டயலிசிஸ் கருவியை உக்லா மருத்துவக் கல்லூரி கண்டுபிடித்துள்ளது. ஆறு ஓல்ட் பேட்டரி மூலம் வேலை செய்யும் டயலிசிஸ் கருவி 5 கிலோ எடை இருக்குமாம். சீக்கிரமே விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்