“சபரிமலை பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இயற்கை யாகவே ஏற்றுக் கொள்ள முடியாது; கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை; பாரம்பரியத்தை கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை; இந்து சமுதாயத்தின் மீது மட்டும் ஏன் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் அமைதி யின்மையை ஏற்படுத்தி உள்ளது; சமுதாயத் தில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது.”

- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

“கோயில்களில் பெண்களைத் தடை செய்தது போன்ற அநீதியான மரபுகள் மாற்றப்பட வேண்டும்; இது போன்ற முக்கியப் பிரச்சனைகள் அரசியல் மயமாக்கப்படக் கூடாது; ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எந்த விதமான பாகுபாடுமின்றி கோயில்களில் நுழைய ஆர்எஸ்எஸ் அனுமதிக்கிறது; தற்போதைய காலங்களில் பெண்களே வேதங்களைப் படிப்பதோடு, கோயில்களில் பூஜையும் செய்கிறார்கள்.”

- ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி